பக்கம்:நிலையும் நினைப்பும், மூன்றாம்பதிப்பு.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43 சி.என்.அண்ணாத்துரை கடைவீதியில் உள்ளவர்களிடத்தில் மாத்திரமல்ல, நடைப் பாதையில் உள்ளவர்களிடத்திலும் செல்ல வேண்டும். நடை பாதையில் உள்ளவர்களிடத்தில் மாத்திரமல்ல, ஆலைத் தொழிலாளிகளிடத்திலும் செல்லவேண்டும், ஆலைத் தொழிலாளிகளிடத்தில் மாத்திரமல்ல, ஏழை விவசாயிகளிடத்திலும் செல்ல வேண்டும். ஏழை விவசாயிகளிடத்தில் மாத்திரமல்ல, விம்மி விம்மி அழுகிற விதவைகளிடமும் செல்ல வேண்டும். விபரீத எண்ணத்திற்காக அல்ல, அவர்களை விடு விக்க! அவர்கள் எல்லோரிடத்திலும் சமயம் வாய்த்த போதெல்லாம், அறிவுப் பிரசாரம் செய்யவேண்டும். முன்னாள் நிலையும் முன்னாள் நினைப்பும் உயர்ந்திருந்த தையும் இந்நாள் நிலையும் இந்நாள் நினைப்பும் தாழ்ந் திருப்பதையும், தாழ்ந்ததை உயர்த்த வேண்டிய தேவையைப் பற்றியும் எடுத்துக் கூறவேண்டும். எப் படியும் மூட நம்பிக்கை நீக்கப்படவேண்டும். பிறகு நல்ல எண்ணங்களைத் தூவினால்தான் அவை நல்ல பலனைத் தரும், பகுத்தறிவால் பண்படாத எந்த உள்ளத்தில் நல்லெண்ணத்தை விதைத்தாலும் அது நல்ல விளைவைத் தராது. நீங்கள் ரயிலில் செல்லும்பொழுது கவனித் திருக்கலாம். உங்களுக்குப் பக்கத்தில் உள்ள ஒரு கிராமத்தாரிடம், ஏறிச் செல்லுகிற ரயிலைப்பற்றி. ரயில் கண்டு பிடித்தவனைப்பற்றி, கண்டு பிடித்த காலத்தைப்பற்றி ரயில் எப்படி ஓடுகிறது என்பது பற்றி ஓடிக்கொண்டிருக்கிற ரயிலை ஒரு நொடியில் எப்படி. எதிரே உள்ள கைப்பிடியால் நிறுத்தலாம்