உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிலை விளக்கம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 அவர் காங்கிரஸ் கட்சியினுடைய பொறுப்பிலே இருக்கிற திருமதி மரகதம் சந்திரசேகர் அம்மையார் கூட, ஏழை எளிய மக்களுக்குக் கொடுக்கிற பணம் அவர்களுடைய கையில் போய்ச் சேருவதில்லை என்ற குற்றச்சாட்டைச் சொன்னார் கள். இங்கே இருக்கின்ற ஆளுங்காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த நம்முடைய முன்னாள் அமைச்சர் திரு. இராமையா கள் கூட இதே குற்றச்சாட்டைச் சொன்னார்கள். வந்து ஆராய்ந்து பார்த்த குழுவினர். நல்ல முறை நடைபெற்றிருக்கிறது என்பதனையும், அந்தக் குழு வினரே நம்முடைய அதிகாரிகளை விட்டு விட்டுத் தனியாகச் சென்று, பல்வேறு கிராமங்களில் இருக்கின்ற ஏழை மக்களைப் பார்த்து-வீடு இழந்தவர்களைப் பார்த்து- உங்களுக்கு யிலே ஆனால், புயலால் மண் அடித்துச் சென்ற நிலங்கஇளச் சீர்திருத்த 10679 6° கோஷ் எவ்வளவு பணம் கிடைத்தது? என்கின்ற கணக்குகளையெல் லாம் கேட்டு—அவர்கள் சரியான முறையிலேதான் இங்கே இந்த உதவிகள் செய்யப்படுகின்றன ; பணவிநியோகம் நடைபெறுகிறது ; பொருள் விநியோகம் நடைபெறுகிறது என்கின்ற அந்தப் புள்ளி விவரத்தை மத்திய அரசுக்குத் தந்திருக்கின்றார்கள். அதன் விளைவாகத்தான் ன்றைக்கு 14 கோடியே 25 இலட்சம் ரூபாய்க்கான அனுமதியை மத்திய அரசு நமக்கு வழங்கியிருக்கிறது என்பதனையும் நான் கட்டிக் காட்ட விரும்புகிறேன். திரு கே. டி. கே. தங்கமணி : மத்திய அரசின் உதவி எந்த அளவுக்குத் தேவையோ அந்த அளவுக்கு மேல் கூட வற்புறுத்தத் தயார்தான். ஆனால், மகாராட்டிரத்தில் இம் மாதிரி மத்திய அரசு பண உதவி செய்யும் போது, மத்திய அரசின் அதிகாரிகளும் கூட இருந்து விநியோகத்தைக் கண் காணித்தார்களே, அம்மாதிரி முறையைத் தமிழ் நாட்டிலும் அனுமதிப்பீர்களா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிலை_விளக்கம்.pdf/14&oldid=1705670" இலிருந்து மீள்விக்கப்பட்டது