உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிலை விளக்கம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17 டர்டு ஏக்கருக்கு வரிவிலக்கு அளிக்கப்படுகிறது. தற்போது 10 ஏக்கருக்கு மேல் உள்ள விவசாயிகளின் வருமான அடிப் படையில் வரி விதிக்கும் போது, 4 ஆயிரம் ரூபாய் வரி விலக்கு அளிக்கப்பட்டது. இதில் தற்போது 5000 ரூபாய் வரை வரி விலக்களிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பிளாண்டேஷன் அல்லாத பயிர்களுக்கு முன்பு 30 ஸ்டாண்டர்டு ஏக்கர் வரை கம்பவுண்ட் செய்துகொள்ள லாம். தற்போது எவ்வித ஏக்கர் எல்லையளவும் இல்லா மல் வரியைக் கம்பவுண்டிங் செய்து கொள்ளலாம். பிளாண்டேஷன் பயிர்களுக்கு முன்பு உயர்ந்த பட்சம் 30 ஸ்டாண்டார்ட் ஏக்கருக்கு மட்டும் கம்பவுண்டிங் செய்ய விதியில் இடம் இருந்தது. தற்போது 30 ஸ்டாண்டர்ட் ஏக்கரா என்பது 50 ஸ்டாண்டர்டு ஏக்கராவாக உயர்த்தப் பட்டது. கம்பவுண்டிங் கட்டண விகிதங்கள் தற்போது வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளன. பாக்கு, திராட்சை, கரும்பு, நிலக்கடலை, பயிர்,பருத்தி, தென்னை ஆகிய பயிர்கள் விளையும் நிலங்களை ஸ்டாண்டர்டு ஏக்கராவாக மாற்றுவதில் மேலும் பல சலுகைகள் வழங்கப்பட்டன. உதாரண மாக முன்பு ஒரு ஏக்கரில் 6-ல் ஒருபங்கு பாக்கு பயிரிட்டால், அதை ஒரு ஸ்டாண்டர்ட் ஏக்கர் என்று எடுத்துக்கொள்ளப் பட்டது. தற்போது ரு ஏக்கரில் 3-ல் ஒரு பங்கு பாக்கு பயிரிட்டால், அதை ஒரு ஸ்டாண்டர்ட் ஏக்கர் என்று எடுத்துக்கொள்ளலாம். அந்தவகையிலே அந்த உடன்பாடு இந்த அவையிலே நிறைவேற்றிவைக்கப்பட்டிருக்கிறது. கோரிக்கை 5 அடுத்து, 5-வது கோரிக்கை பாசனக் கட்டுப்பாட்டை நீக்கித் தண்டத் தீர்வை போடுவதைக் கைவிட வேண்டும். -இது கோரிக்கை. உடன்பாடு என்னவென்றால், ஏற் கெனவே இதற்கான தற்காலத் தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. இது பற்றி இந்தப் பகுதிகளில் விவசாயிகளின் மாநாட்டைக் கூட்டிப் பரிசீலித்துத் தக்க முடிவு எடுக்கப்படும் ஏற்பட்ட உடன்பாடுஇது. எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? 22-1-1973-ல் கோவை உயர்மட்ட மாநாடு ஒன்று நடத்தி அம்மாநாட்டில் பயிர் செய்வது சம்பந்தமான கட்டுப்பாடுகள் பற்றி விவாதிக்கப்பட்டுள்ளது. முடிவுகள் விரைவில் அறிவிக்கப் இருக்கின்றன. UL கோரிக்கை 6 ஆறாவது கோரிக்கை. பாசனமற்ற பகுதிகளுக்கு உடனடி யாக நீர்ப்பாசனம் செய்ய உத்திரவிடச் செய்ய வேண்டும். அதுவரை அந்தப் பகுதிகளை வறட்சிப் பகுதிகளாகப் பிர இது ஆறாவது கோரிக்கை. கடனப் படுத்த வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிலை_விளக்கம்.pdf/19&oldid=1705675" இலிருந்து மீள்விக்கப்பட்டது