உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிலை விளக்கம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21 நெய்வேலி, கேரளா, மைசூர் மாநிலத்திலிருந்து66-67-ல் வாங்கப்பட்ட மின்சாரம் 15,980இலட்சம் யூனிட். 71-72-ல் அது 24,490 இலட்சம் யூனிட்டாக உயர்ந்தது. நெய்வேலி, கேரளா, மைசூர் ஆகிய இடங்களில் பெற்றவை 24,490 இலட்சம் யூனிட்டாகும். இதிலே மின்வெட்டு இப்பொழுது தான் தமிழ் நாட்டிலே, முன்னேற்றக் கழக அரசிலே வந்து விட்டதாகக் கற்பனை செய்து கொண்டு சில பேர் பேசினார்கள். அவர்களுக்கு 1961-ஆம் ஆண்டிலிருந்து இந்த மின்சாரத் துறையிலே ஏற்பட்டிருக்கிற சங்கடங்களை நான் விளக்கக் கடமைப்பட்டிருக்கிறேன். சங்கடங்கள் 1961-ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் ஏற்பட்ட மின்சாரவெட்டு 40 சதவீதம்-12 நாட்களுக்கு, வெட்டப்பெற்றது. பின்னால் 15 சதவீதம் சுமார் 6 நாட்களுக்கு வெட்டப்பெற்றது. 1962-ஆம் ஆண்டு 40 சதவீதம்-15 நாட்களுக்கு. 1963-ஆம் ஆண்டு 80 சதவீதம் 16 நாட்களுக்கு. 1964-ஆம் ஆண்டு 40 சதவீதம் 3 நாட்களுக்கு, பின்னால் அது 80 சதவீதமாக்கப்பட்டது 18 நாட்களுக்கு. 1965-ஆம் ஆண்டு 25சதவீதம்-இரண்டு மாதங்களுக்கு. 1966-ஆம் ஆண்டு 25 சதவீதம் ஏழு மாதங்களுக் ருக்கு. பின்னர் 1967 முதல் 69 வரை மின் வெட்டு இல்லை. 1970-ல் 40 சதவீதம் வெட்டப்பட்டது, 6 நாட்களுக்கு. (நெய்வேலி அப்பொழுது மூடப்பட்ட காரணத்தால்.) 1971-ல் மின் வெட்டு இல்லை. 1972-ல் 25 சதவீதம் மின்வெட்டு-23 நாட்களுக்கு. இங்கு மாத்திரமா? பிறகு 1-10-1972-க்கு பிறகு இதுவரையில் 25 சதவீத மின்வெட்டு. 4 மாதங்களுக்கு வெட்டப்பட்டிருக்கிறது. குறிப்பாகத் தொழிற்சாலைகளுக்கு வெட்டு உயர்த்தப்பட்டு 40 சதவீதமாக ஆக்கப்பட்டிருக்கிறது. மேலும், நிலைமைகள் நெருக்கடியாகக் கூடும். அதை மறுக்க விரும்பவில்லை. மறைக்கத் தேவையுமில்லை. ஆனால்,மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகிற நேரத்தில், அங்கே இல்லையா என்று கேட்டு நாம் ஆறுதல் பெறமுடியாது என்பதை நிச்சயமாக ஒத்துக் கொள்கிறேன். ஆனாலும், இது வெறும் தமிழ்நாட்டிலே மாத்திரம் உள்ள பிரச்சினை மட்டுமல்ல. அனைத்திந்தியா விலும் பெரும் பிரச்சினையாக இருக்கிறது. 109/125-4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிலை_விளக்கம்.pdf/23&oldid=1705679" இலிருந்து மீள்விக்கப்பட்டது