உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிலை விளக்கம்.pdf/3

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

CONNEMARA PUBLIC LIBRARY 25 FEB 1973 MADRAS சட்டப் பேரவையில் பேரவைத் தலைவர் அவர்களே, ஆளுநர் உரையின் மீது நடைபெற்ற விவாதத்தில் மாண்புமிகு காங்கிரஸ் கட்சியின் தலைவர் அவர்களும் நானும் கலந்து கொள்கின்றது உள்ளிட்ட இந்த எண்ணிக்கையை வைத்துப் பார்த்தால் 53 பேர் இந்த விவாதத்திலே கலந்து கொண்டிருக்கிறோம். I இந்த 53 பேரில் என்னையும் சேர்த்து ஆளும் கட்சியின் சார்பில் 21 உறுப்பினர்களும், ஸ்தாபன காங்கிரஸ் கட்சியின் சார்பில் s உறுப்பினர்களும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் 6 உறுப்பினர்களும், சுதந்திராக் கட்சியின் சார்பில் 4 உறுப்பினர்களும், பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் 3 உறுப்பினர்களும், ஆளும் காங்கிரஸ் கட்சியின் சாச்பில் 4 உறுப்பினர்களும், முஸ்லிம்லீக் கட்சியின் சார்பில் 4 உறுப்பினர்களும், தமிழரசுக் கழகத்தின் சார்பில் உறுப்பினரும், சுயேச்சை ஒருவரும் ஆக 53 பேர்கள் ஆளுநர் உரையின்மீது, மாண்புமிகு உறுப்பினர் திரு. கணபதி அவர்கள் கொண்டுவந்த நன்றி அறிவிப்புத் தீர்மானத்தை ஒட்டியும், எதிர்த்தும் விவாதங்களிலே ஈடுபட்டிருக்கிறோம். புராணிகர்கள் எந்த ஒரு காரி யத்தையும் கணபதியை வைத்துத்தான் ஆரம்பிப்பார்கள் என்பதைப் போலவோ என்னவோ இயற்கையாக இந்த ஆண்டு ஆளுநர் உரையின்மீது நன்றி தெரிவிக்கின்ற தீர் னத்தைக் கணபதி கொண்டு வந்து அதிலே விவாதமும் தை பெற்றிருக்கிறது. இதை நான் சொன்னால்கூட மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் பொன்னப்ப நாடார் அவர்கள் கணபதியைப் பற்றி இங்கே பேசலாமா? முருகனைப் பற்றி அவர் பேசினார்; இவர் கணபதியைப் பற்றிப் பேசலாமா? என்று கேட்கக் கூடும். இந்த விவாதத்தில் நம்முடைய கம்யூனிஸ்டுக் கட்சியின் தலைவர் மாண்புமிகு கே.டி.கே. தங்கமணி அவர் கள் கொஞ்சம் வேகமாகவே தன்னுடைய கருத்துக்களை எடுத்துக் கூறினார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிலை_விளக்கம்.pdf/3&oldid=1705659" இலிருந்து மீள்விக்கப்பட்டது