உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிலை விளக்கம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 மை வேடிக்கை ! வேடிக்கை என்னவென்றால் 1971-ஆம் ஆண்டுத்தேர்தல் முடிந்த பிறகு, கூட்டணிக் கட்சிகளைப் பார்த்து, மைவைத்து ஜெயித்து விட்டீர்கள் என்று சொன்ன நம்முடைய பழைா காங்கிரஸ் நண்பர்களை மறந்துவிட்டு, தங்கமணியும் வைத்து ஜெயித்தார் என்றுதான் பொன்னப்ப நாடார் சொன்னா பொன்னப்ப நாடார் என்றால் அவருடைய கட்சி சொன்னது-என்னுடைய அருமை நண்பர் எம். ஜி. ராமச் சந்திரன் அவர்களும் மைவைத்து ஜெயித்தார் என்றுதான் காங்கிரஸ் கட்சி சொன்னது. நம்முடைய ஹண்டே அவர்கள் சொன்னார்களோ என்னவோ எனக்குத் தெரியாது. அனந்தநாயகி அம்மையார் அவர்கள் இங்கே சொல்வி விட்டும் ஈறகு அங்கே போய் உட்கார்ந்து கொண்டார்கள், மை வைத்து ஜெயித்து விட்டார்கள் என்று அனந்த நாயகி அம்மையார் அவர்கள் சொன்னார்கள். இப்பொழுது வைத்து ஜெயித்தாகக் குற்றம் சாட்டப்பட்ட கட்சியிலேயே அவர்கள் இருக்கின்றார்கள், நான் அதை வரவேற்கின்றேன். ஆகவே, ஒவ்வொரு தேர்தலிலும், அந்த முடிவை ஏற்றுக் கொள்ள முடியாமல் இப்படிப்பட்ட ஒரு தவறான போக்கிலே நாம் ஈடுபடுவது ஜனநாயகத்திற்கு ஒரு நல்ல ஆரோக்கிய மான மார்க்கத்தைப்பெற்றுத் தராது என்பதற்காகத்தான் இதைச் சொல்லுகிறேனே அல்லாமல் வேறல்ல. பிற குற்றச்சாட்டுகள் ல 6012 செஞ்சியிலே பெருமாள் நயினாரைப்பற்றிச் சொன்னார்கள். அவர் உர மூட்டைகளைக் கடத்திச் சென்று இன்னொரு இடத்திலே வைத்து விட்ட காரணத்தினால், அந்த மூட்டை கள் கடத்திவைக்கப்பட்ட இடம் போலீசாரால் சீல் வைக்கப் பட்டதென்றும், அவர்மீது இருக்கின்ற வழக்கிற்காக அவர் கைது செய்யப்படாத நிலையில் அவரே வந்து ணடைந்து விட்டார் என்றுதான் செய்திகள். மேலும், தகவல்கள் எனக்குக் கிடைத்த பிறகு வேண்டுமானால் அதைப் பற்றிச் சொல்லுகிறேன். வழக்கு இருக்கிற காரணத் தால் விவரமாகச் சொல்ல நான் விரும்பவில்லை. திரு. சுவாமிதாஸ் அவர்கள்-கன்னியாகுமரி மாவட்டத் தினுடைய மாண்புமிகு உறுப்பினர்--ஒரு பெரிய குற்றச் சாட்டைச் சொன்னார்கள். அங்கே தச்சம் பறம்பு என்ற ஒரு ஊரில் 34 இலட்சம் ரூபாய் அளவுக்குத் தேவையின்றிச் செலவு செய்துவிட்டார்கள். அது, முன்னேற்றக் கழகத் தைச் சேர்ந்த பஞ்சாயத்து யூனியன் தலைவருடைய ஊர். ஆகவே, செலவு செய்து விட்டார்கள் என்று குறிப்பிட்டார் கள். நிலைமை என்ன வென்றால்- -இந்திய நாட்டினுடைய விடுதலை வெள்ளி விழாவைக் கொண்டாடுவதற்காகத் தமிழ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிலை_விளக்கம்.pdf/40&oldid=1705696" இலிருந்து மீள்விக்கப்பட்டது