உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிலை விளக்கம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41 ஏன் போய்ச் சேர்ந்தார்கள்? கே. டி. கே. தங்கமணி அவர்களின் பேச்சிலே பெரும் பகுதி, ஆளுங்கட்சி இரண்டாகப் போய்விட்டது என்ற கவ லையை உள்ளடக்கியதாக இருந்தது. மற்றக்கட்சிகள் இரண் டாகப் போனபோது நாங்கள் போய்ச் சேரவில்லை. ஆனால், ஆளுங்கட்சி இரண்டாகப் போனபோது நாங்கள் ஏன் போய்ச் சேர்ந்தோம் தெரியுமா என்ற கேள்வியை எழுப்பினார்கள். இங்கே ஆளுங் கட்சி இரண்டாக ஆகிவிட்டது ஆகவே போய்ச் சேர்ந்தோம் என்று குறிப்பிட்டார்கள். என் னுடைய அருமை நண்பர் திரு. எம். ஜி. ஆர். அவர்கள் அதிருஷ்டக்காரர். அவர்கள் இங்கே வராவிட்டாலும், அவரைப் பற்றிப் புகழ்ந்து பேசுவதற்கு அவருடைய கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் இங்கே வராவிட் டாலும், அவ்வளவு பேருடைய பொறுப்பையும் திரு கே. கே தங்கமணி டி. அவர்கள் எடுத்துக் கொண்டு, எம். ஜி. ஆர். அவர்களுடைய சிலாக்கிய குணங்கள, அவருடைய தியாகத்தை, அவருக்கு மக்களிடத்திலே ஏற்பட் டிருக்கின்ற சக்தியை, பெருமையை, செல்வாக்கை இங்கே எடுத்துச்சொன்னதற்காக, உள்ளபடியே என்னுடைய பழைய நண்பர் என்ற பெயரால் எம். ஜி. ஆர். அவர்களின் சார்பாக என்னுடைய பணிவன்பான நன்றியைத் திரு, கே. டி. சே தங்கமணி அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்ளப் பெரிதும் கடமைப் பட்டிருக்கிறேன். எவ்வளவோ அதிகமாகச் சொல்லியிருக்கிறார்கள். காந்திக்குக்கூட இவ்வளவு கூட்டம் வந்ததில்லை என்று கே. டி. கே. தங்கமணி அவர்கள் ஒரு கூட்டத்திலே பேசியதை நான் பத்திரிகையிலே படித்தேன். என்னென்னவோ நடந்துவிட்டது என்றெல்லாம் சொன் னார்கள். இந்த இரண்டு, மூன்று மாத காலங்களில் நாடே அல்லோல கல்லோலப்பட்டுவிட்டது என்றெல்லாம் சொன் னார்கள். நான் இல்லையென்று அதை மறுக்கவில்லை. அன்றைக்குப் பேசிய திரு டென்னிஸ் அவர்கள் மிகவும் அழகாகக் குறிப்பிட்டார்கள். அவர்கள் ஏறிச் சென்ற ஒரு பஸ்ஸை வழியிலே அ.தி.மு.க உறுப்பினர்கள் அந்தக் கட்சியைத் சேர்ந்தவர்கள் மறித்தார்கள் என்றும், பிறகு நிறுத்திவிட்டார்கள் என்றும், ஏன் பஸ்ஸை நிறுத்திவிட்டீர்கள் என்று டரையும் கேட்ட போது, பார்கள், கண்டக் அடிப் என்றும் டிரைவரையும், நிறுத்தாவிட்டால் பஸ்ஸைக் கொளுத்திவிடுவார்கள் சொன்னார்கள் என்ற தகவலை நம்முடைய திரு. டென்னிஸ் அவர்களே இங்கே குறிப்பிட்டிருக்கிறார்கள். காமராஜரோடு உறவா? இதை நான் சொன்னால் ஏதோ ஸ்தாபன காங்கிரசுக்கும், திராவிடமுன்னேற்றக்கழகத்திற்கும் மறைமுகமான ஓர் உறவு இருப்பதாக யாரும் பழிக்கக் கூடும். அதற்காகவே நிரம்ப

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிலை_விளக்கம்.pdf/43&oldid=1705699" இலிருந்து மீள்விக்கப்பட்டது