உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிலை விளக்கம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சட்ட மன்றத்தில் மாண்புமிகு முதல்வர் பேசியதாவது: சட்ட மன்றத் தலைவர் அவர்களே! அமுலுக்குக் கொண்டு இன்று இந்த அவையிலே வேறு சில முக்கியமான மசோதாக்கள் விவாதிக்கப்பட இருக்கின்றன. காலையிலே சட்டப்பே பரவையில் இரண்டரை மணி நேரம் வரையிலே அந்த மசோதாக்கள் விவாதத்திற்கு உரிய நேரத்தை எடுத் துக் கொண்டிருப்பதையும் நான் நன்றாக அறிவேன். ஆகவே, இந்தப் பதில் உரை நீண்டு விடாமல் வெகு விரைவிலேயே நான் முடித்துக் கொள்ள விரும்புகிறேன். ஆளுநர் அவர்களுடையஉரையில், மூதறிஞர் இராஜாஜி அவர்களுடைய மறைவுக்கு இரங்கல் தெரிவித்ததோடு, அவருடைய இழப் பினால் தமிழ்நாடும் இந்தியப் பெருநாடும், அனைத்துலகத்திலே பல்வேறு நாட்டு அரசியல் வல்லுநர்களும் எந்த அளவுக்கு மனம் உடைந்தார்கள் என்பதனை நாம் அனைவரும் நன்றாக அறிவோம். அந்த மூதறிஞருக்கு நினைவுச் சின்னங்களை, மண்டபங்களாகக் கட்டுவதிலே மாத்திரம் நம்முடைய பொறுப்பு நின்றுவிடவில்லை என்பதனையும், அவர் மிகப் புனிதமாகப் போற்றி வந்த மதுவிலக்குக் கொள்கையைத் தமிழ்நாட்டிலே மீண்டும் வர வேண் வடும் மாண்புமிகு என்ற கருத்தையும் பினர்கள் பலர் இங்கே எடுத்துரைத்து கிறார்கள். நான் அது பற்றி அடிக்கடி இந்த கருத்தை எடுத்துச் சொல்லிவந்து இருக்கின்றேன் என்றா லும்,இராஜாஜி அவர்கள்இந்தியப்பெருநாட்டின் ஒருதேசியச் சாத்து என்கின்ற அளவில் தேசிய அளவிலேயே அவருக்கு இருக்கக்கூடிய நினைவுச் சின்னமாக இந்தியா முழுமைக்கும் மது விலக்குக் கொள்கை அமுல் ஆகின்ற அந்த ஒரு நல்ல நாள் விரைவிலே வரவேண்டும் என்கின்ற ஒரு விழைவினை நான் தெரிவித்துக் கொள்கிறேன். ஆளுநர் உரையிலே மாண்புமிகு எதிர்க்கட்சித்தலைவர் அவர்களும், பல்வேறு கட்சி களுடைய தலைவர்களும், உறுப்பினர்களும், மிகக்கடுமையாகக் கண்டனத்தை, பல குற்றச் சாட்டுக்களை, குறைபாடுகளை இங்கே எடுத்துரைத்திருக்கின்றார்கள். குறிப்பாக நம் முடைய சுதந்திராக் கட்சியினுடைய தலைவர் மாண்புமிகு சா. கணேசன் அவர்கள் 'முக்கியமான நேரங்களிலே அமைச் சர்கள் அவைக்கு வருவதில்லை' என்று கூடக் குற்றம் சாட்டி உறுப் ருக் அரசின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிலை_விளக்கம்.pdf/51&oldid=1705707" இலிருந்து மீள்விக்கப்பட்டது