உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிலை விளக்கம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51 மிகுந்த பெருமை அடைகின்றேன். சதங்கை, காலிலே கட்டப்பட்டிருந்தாலும், அதனுடைய சங்கீத நாதம் அனைவ ராலும் பாராட்டப்படும். கையிலே இருக்கிற தகர டப்பா விலே கூழாங்கல்லைப் போட்டுத் தலைக்கு மேலே எடுத்து ஆட்டி னால், அது உயரத்திலே ச சத்தம் கேட்டாலும், அந்த நாதத்தை யாரும் விரும்ப மாட்டார்கள். ஆகவே, காலிலே இருக்கிற சதங்கையினுடைய நாதம் பெரு மைக் குரியதாகவும், தகர டப்பா விலே போட்டு ஆட்டுகின்ற கூழாங்கல்லினுடைய நாதம் என்று. கூடச் அதை நாதம் சொல்ல மாட்டார்கள்- சத்தம் என்று தான் சொல்வார்கள்; ஆகவே, சத்தத்திற்கும் சங்கீத நாதத்திற்கும் வித்தியாசம் தெரிந்துகொண்டு, கருத்துக்களை எடுத்துச் சொல்கின்ற அந்த அரிய உள்ளத்தைப் பெற்றிருக் கின்ற பெரியவர்களும், பெரும் உள்ளம் படைத்தவர்களும் வீற் றிருக்கின்ற இந்த அவையில் சில ஆளுநர் உரையின்மீது எடுத்துச் சொல்லப்பட்ட பல்வேறு கருத்துக்கள், இந்த அரசினுடைய கொள்கைகளைச் சில நேரங்களிலே குறைத்துச் சொல்வதாக இருந்தாலும், அல்லது அவைகளுக்கு மாறுபட்டவைகளாக இருந்தாலும், இருந்தாலும், வேறுபட்டவைகளாக நேரங்களிலே முரண்பட்டவைகளாக இருந்தாலும், அவைகளைப் புறக் கணிக்காமல் எண்ணிப்பார்த்துச் சீர்தூக்கி சிந்தித்துச் செயல் படுவதிலே நாங்கள் மெத்த நிதானத்தைக் காட்டுவோம் என்ற உறுதி மொழியினை மாத்திரம் இந்த அவையிலே நான் தெரிவித்துக் கொள்ளப் பெரிதும் கடமைப்பட்டிருக் கின்றேன். (தொடர்ந்து முதல்வர் அவர்கள் சட்டமன்றத்தில் பேசிய போது வெள்ளத்துயர் தடுப்பு, விவசாயிகள் பிரச்சினை, மின்வெட்டு ஏனைய கருத்துக்களை புள்ளி விவரங்களுடன் எடுத்துக் காட்டிப் பேசினார்கள்.) CONNEMARA PUBLIC LIDRAR 25 FEB 1973 HA

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிலை_விளக்கம்.pdf/53&oldid=1705709" இலிருந்து மீள்விக்கப்பட்டது