நிழல் முகங்கள் 5
வழிமறித்தான், அந்தப் பயலின் காதை திருகியபடியே, 'முட்டாப்பயலே. இவன் முரடன் மட்டுமில்ல. முழுப் புளுகன். கந்தரம் அண்ணனுக்குத்தான் ரயில் பாஸ் இருக்கே அவர் எப்படி டிக்கெட் எடுப்பார் என்கிற அறிவு ஒனக்கு இருக்கா? இவன் ஒன்னை ஏமாத்துறான். குளிர்ல நனைச்சு கொல்லப் பார்க்கிறான். பேசாம என்கூட வா என்று பயலின் கையைப் பிடித்து இழுத்தான். பயலும், தன் புத்தியை செருப்பால் அடிக்க வேண்டும் என்பது போல், கையை செருப்பு மாதிரி வைத்துக் கொண்டு, தனது தலையிலேயே அடித்துக் கொண்டான். பிறகு, யாரும் எதிர் பார்க்காத வகையில், முண்டாசுக்காரனின் வயிற்றில் கீச்சுக் கீச்சுக் காட்டினான். முண்டாசு பிடியை விட்டபோது, பயல் தென்நோக்கி ஓடினான். அவன் பின்னால், முண்டாசும், வழிமறிப்பு செய்தவனும் தலைவிரி கோலமாக ஓடினார்கள்.
இந்த சயமத்தில், அந்தப் பயல், ஒட்ட வேகத்தில், தலையில் பழக்கூடை சுமந்து வந்த, ஒரு கிழட்டு வியாபாரி மேல் இடறி விழுந்தான். அவர் நிலை தடுமாறினாலும் கீழே விழவில்லை. ஆனால் அவரது கூடை விழுந்து கர்ணம் போட்டது. ஆரஞ்சுப் பழங்கள் கோழிக்கூட்டிற்கு வெளியே வந்த குஞ்சுகள் மாதிரி, கூடையில் இருந்து விடுபட்டு பிளாட்பாரத்தில் உருண்டோடின. அவற்றைச் சில பிச்சைக்காரச் சிறுவர்களும், வசதியுள்ளவர்கள் போல் தோன்றிய ஒருவரும் பொறுக்கினார்கள். அந்தப் பயல், அந்த மசால்வடை வியாபாரி மீதும் இடறி விழமாட்டானா என்பது போல் ஏங்கிப் பார்த்தார்கள். இப்படிப் பிச்சை எடுத்துப் பிழைப்பு நடத்துவதைவிட, இந்தச் சிறுவனைப் போலப் பராக்குப் பார்த்து ஒடுவதுபோல் ஓடி, கிழட்டு வியாபாரிகள் மீது இடறி விழுவது போல் விழுந்து, பொறுக்கலாமே என்றுகூட அவர்களில் ஒருவன் சிந்திப்பதுபோல் கைவிரல்களைப் பிடிபட்ட பழத்தின் மேல் அடித்தான்.
இதற்குள், அந்த மராத்திக் கிழவன், சின்னக் கிழவன் போல் தோன்றிய அந்தப் பயலைப் பிடித்துக் கொண்டான். அவன் கையைத் திருகப் போனான். அவன் ஒற்றை வேட்டிக்குள் பணம் இருக்குமா என்பதுபோல், அதை அவிழ்க்கப் போனான். ஆனால், அந்தச் சிறுவனோ, ரயில் சக்கரம் ஒன்றில் ஒட்டிக் கிடந்த பத்துப் பதினைந்து பழங்களைச் சுட்டிக் காட்டி, அவற்றை எடுப்பதற்குத் தன்னை இறக்கிவிடும்படிக் கிழவனுக்குச் சைகை செய்தான். பழத்தை விடுவதைவிட, பையனை விடுவது மேல் என்பதுபோல் நினைத்த கிழவன், அந்தப் பயலையும் ரயில் பாதையையும் மாறி மாறிப் பார்த்துவிட்டு, பின்னர் பையனைப் பிடித்து, கீழே இறக்கப் போனான் இந்த அமளி புரியாத முண்டாசுக்காரன், கண்ணுக்குத் திரைபோட்ட குதிரைபோல, வேக வேகமாய் ஓடினான்.
கி. 2,