பக்கம்:நீகிரோ மாமா-மொழிபெயர்ப்பு.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

மும் திரும்பி மோப்பம் பார்த்தன. ஆளுல் அதற்கு மேலாக அவைகள் முன்னேறிச் செல்ல மறுத்தன. இதைக் கண்ட லெகிரி, இப்பொழுது நாம் திரும்பிச் செல்வோம். காலையில், பொழுது விடிந்தவுடனே, மறுபடி நாய்களே அழைத்துவந்து, முயற்சி செய் வோம்!' என்று சொல்லித் திரும்பிவிட்டான். கேஸியும், எமிலினும் அதே பாதையில்தான் நடந்து சென்ருர்கள். ஆனல் ஓடையைக் கண்டதும் அவர்கள் அதில் இறங்கி, அதைக் கடந்து செல் லாமல், நீரின் போக்கிலேயே வெகு தூரம் நடந்து சென்றனர். அவர்கள் நீருள் இறங்கிய பின்னல், வாசனை எதுவும் தெரியாததால்தான் நாய்கள் கரையி லேயே திகைத்து நின்றுவிட்டன. ஓடையிலிருந்து அந்த மாதர் இருவரும் மறுபடி கரையிலேறி, நடந்து சென்று, லெகிரியின் வீட்டில் நுழைந்து, சந்தடி செய் யாமல், மாடியிலிருந்த பேய் வாழும் அறைக்குள் மறைந்து கொண்டனர். அந்த நேரத்தில் லெகிரியின் கூட்டத்தார் அவர்களை வெளியே தேடிக் கொண் டிருந்தனர். அன்றிரவு முழுதும் லெகிரி அடிமைகளே உறங்க விடாமல் அதட்டிக் கொண்டும், சீறிக் கொண்டும் இருந்தான். மறுநாள் காலேயில் மீண்டும் நாய்களே யும், அடிமைகளையும் அழைத்துக்கொண்டு அவன் வெளியே சென்று தேடினன். நாய்கள் ஓடைக் கரை யில் முன்பு நின்ற இடத்திலேயே மீண்டும் நின்று கொண்டன. பிறகு லெகிரி, அக்கம்பக்கத்திலிருந்த பண்ணை களுக்குச் சென்று ஆங்காங்கிருந்த அடிமைகளையும் அழைத்துவந்து தேடச் செய்தான். அவர்கள் நெடுங்

III

111