பக்கம்:நீங்களும் இளமையாக வாழலாம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீங்களும் இளமையாக வாழலாம்

77




10
நிச்சயம் வாழலாம்!

சரித்திரம் இருக்கிறது.

எந்த வயதிலும், எந்த நிலையிலும் நம்மால் இளமையாக வாழ முடியும். இது முடியாத காரியமல்ல...

நமக்கு முன்னே வாழ்ந்தவர்கள் பலர், நடந்து காட்டிச் சென்ற சரித்திர சுவடுகள் இன்னும் அழியாமலே இருக்கின்றன.

நூறு வயதுக்கும் மேலே நிமிர்ந்து நின்று வாழ்ந்தவர்கள் நீண்ட பல சோதனைகளைக் கடந்து, நிலையான புகழைப் பெற்று உயர்ந்தவர்கள் ஏராளம், ஏராளம்.

கல்யாணம் ஆனவுடனேயே ‘காலம் முடிந்து விட்டது. இரண்டு குழந்தைகள் பிறந்து விட்டாலே, எல்லாம் முடிந்தது’ என்று எண்ணுபவர்கள், அறியாமையிலேயே உழல்கின்றார்கள் என்று அர்த்தம்.

முப்பதில் வாழ்க்கை முடிந்து போகிறது என்று முனகுபவர்களை ‘முட்டாள்கள்’ என்று நாம் தைரியமாக அழைக்கலாம். ஏனென்றால், அவர்கள் இயற்கையை