பக்கம்:நீங்களும் உடலழகு பெறலாம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜ் செல்லையா குறிப்பு: பயிற்சிகளை எளிதாகப் புரிந்து - தொடர்ந்து செய்ய வேண்டும் என்பதால் தான், மூன்று பிரிவாக்கித் தந்திருக்கிறோம். பயிற்சியில் பழக்கமும் பக்குவமும் பெறப்பெற. அதிக நேரம், அதிக எண்ணிக்கையில் செய்ய வேண்டும். முதிர்ந்த நிலைக்கு வந்தவர்கள், தொடக்க நிலைப் பயிற்சிகளைச் செய்யவே கூடாது என்பதல்ல. எடைப்பயிற்சிகளைத் தொடங்கி அவைகளைச் செய்யும் முன், இப் பயிற்சிகள் பலவற்றைச் செய்து, உடலைப் பதப்படுத்திக் கொள்ள வேண்டும். குறிப்பு : மூச்சிழுத்த பின் உட்கார்ந்து, எழுந்தவுடன் மூச்சு விடவும். 10. கால்களை மடித்து வைத் து குதிகால மேல உட்கார வேண்டும். கைகள் ஒவ்வொன் றும் அந் தந்த தொடைமேல் இருக்க வேண்டும். இடது கால் பின்வரும்போது, வலது கால் முன்னே வருவது போல், உட்கார்ந்த வண்ணமே மாறி மாறி குதிக்க வேண்டும். 100 தடவை. -