பக்கம்:நீங்களும் நோயில்லாமல் வாழலாம்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

88

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


6. உணவும் நீரும்

பசியைப் போக்கத்தான் உணவை உட்கொள்கிறோம். அதற்குரிய பலனாக, பலமும் திருப்தியும் கிடைக்கின்றன என்பதும் நமக்குத் தெரியும். ஆனால் உணவு பல வகைகளாக உள்ளது. அது பலவகையாகப் பிரிந்து உடலை பாதுகாக்கிறது. பலப்படுத்துகிறது. பராமரிக்கிறது, பரிவுடன் பழுது பார்த்து நிறைவு செய்கிறது என்பதையும் நாம் புரிந்து கொண்டால், உண்ணும் உணவை நாம் எச்சரிக்கையுடனும் எண்ணிப் பார்த்தும் நன்றாகத் தேர்ந்தெடுத்து உண்ணவும் உதவும்.

முதலாவதாக, உடலை உருவாக்கும் உணவுவகை (Body Building Foods) என்பார்கள். புரோட்டீன் சத்துதான் இதற்கு ஆதாரம் ஆகும். கறி, மீன், முட்டை, பால், பீன்ஸ். பாலாடைக் கட்டி இவற்றில் அதிகம் கிடைக்கிறது. வளரும் குழந்தைகளுக்கு இந்த வகை உணவு ஒரு வரப்பிரசாதமாகும்.

கடின உழைப்பாளர்களுக்கும், கர்ப்பவதியாக உள்ளவர்களுக்கும், நோய் நீங்கிய நிலையாளர்களுக்கும் புரோட்டீன் சத்து தேவைப்படுகிறது, அது, சக்தி நீங்கிய உடலை சமாளித்து, பழுதுபட்ட திசுக்களைப் பத்திரமாகப் பார்த்து, பலமுடன் திகழச் செய்கிறது.

அடுத்ததாக, வெப்பத்தையும் வலிமையையும் தரும் உணவு வகைகள் (Heat and Energy Foods). இவை கார்போஹைடிரேட்டுகளும், கொழுப்புச் சத்துக்களுமாகும். அரிசி, கோதுமை, உருளைக்கிழங்கு, கிழங்கு