பக்கம்:நீங்களும் மகிழ்ச்சியாக வாழலாம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18


சிறப்பான மகிழ்ச்சியோ ஒவ்வொரு நாளிலும், ஒவ்வொரு மணித் துளியிலும் ஒவ்வொரு நொடியிலும் ஜீவநாடியாக விளங்குகிறது. என்கிருர் ஸ்டீபன் பட்லர் என்பவர். ஆமாம் : மனித வாழ்க்கையானது ஒரு லட்சியங் களுக்காகத் தான் உருவாக்கப்பட்டிருக்கிறது. உயர்ந்த லட்சியங்களுக்காகவே படைக்கப்பட்டிருக்கிறது. அப்படி யென்ருல், அதற்கு அடிப்படைத் தேவையாக அமைவது மகிழ்ச்சிதானே ! இயற்கையின் ஒவ்வொரு துடிப்பும்,ஒவ்வொரு அழைப்பும் அமைதியின் சிரிப்பும், ஆரவாரப் பெருக்கும் எல்லாம், மனிதன் இன்பமாக. மகிழ்ச்சியாக வாழ ப் பிறந்தவன் தான் என்றே பறை சாற்றிக் கொண்டிருக்கின்றன. ஆளுல் மனிதன் என்ன செய்கிருன் ? தான் உண்மையி லேயே மகிழ்ச்சியாக வாழ முயற்சிக்காமல், முயற்சித்தும் வெற்றி பெருமல், மனக்கவலே என்னும் சுடு மணலிலே புரண்டு புரண்டு வாழ் நாளே வீணுளாக்குக்கிருன். அது மட்டுமல்ல. அவன் செய்கின்ற காரியம் தான் நமக்கு ஆச்சரியம் ஊட்டுவதாக அமைந்திருக்கிறது. தான் மகிழ்ச்சியாக வாழ்வதாக மற்றவர்கள் நம்ப வேண்டும் என்பதற்காக அளவுக்கு அதிகமாகவே சிரமப் பட்டு நடிக்கிருன். ஆல்ை, அந்த வேஷம் விபரீதமாக, நேரங்கெட்ட நேரத்தில் அல்லவா கலந்து போகிறது ? இதனுல் தான், கிரோடோடஸ் எனும் அறிஞன் கூறுகிருன். எந்த மனிதனும் தனது வாழ் வின் கடைசி நேரம் வரை நிம்மதியாக வாழ்ந்தது கிடையாது. அப்படி எவனுவது மகிழ்ச்சியாக இருந்திருப்பானே யால்ை, அவன் உண்மையாகவே அதிர்ஷ்டசாலி தான்’ என்று கூறும் பொழுது, மனிதன் மகிழ்ச்சியாகவே இருக்கமாட்டான் என்று அடித்துக் கூறுவது போலல்லவா இருக்கிறது.