பக்கம்:நீங்களும் மகிழ்ச்சியாக வாழலாம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 நாம் அதை இங்கு நினைக்க வேண்டாம். மனிதனுக்குப் பெருமையே நினைப்பதில் தான் இருக்கிறது. நாம் விரும்புகிருேம், அது மனிதர்க்கே உரிமையானது. அதிலும் தவறில்லை. விருப்பம் தான் வாழ்க்கையில் பல்வேறு விதமான திருப்பங்களைத் தருகின்றன. முன்னேற வழி காட்டுகின்றன. விருப்பம் எழும் பொழுதே. எதிபார்ப்பும் உடன் வருவது இயல்புதானே. விருப்பம் நிறைவேறி விட்டால் வெற்றி என் கிருேம். மகிழ்ச்சியடைகிருேம். மனதிலே மா பெரும் சாம்ராஜ்ய அதிபராகி, நிலை கொள்ளாத சுகம் காண் கிருேம். என்னல் தான் இப்படி செய்ய முடியும் என்று தற் பெருமை பேசுகிருேம். தற்புகழ்ச்சிகளை அள்ளி வீசுகிருேம். விருப்பம் நிறைவேற வில்லையென் ருல்... காற்றுப்போன பந்தாகிக் கிடக்கிருேம்; நூலறுந்த பட்டம் போல செயலடங்கி முடங்கிப் போய் கிடக்கிருேம்; கீழே விழுந்த அப்பளம் போல, நிஜனவுகளுள் உடைந்து போய் விடுகிருேம்! ஏன்? நாம் தோல்வியை விரும்பவில்லை வெறுக்கிருேம். னைத்துப் பார்க்கவே நடுங்குகிருேம்: மயங்குகிருேம். நடுங்கு கிருே @ ஏன் நமது விருப்பம் நிறைவேறவில்லை? ஏன் நமது ஆசைக்கு வெற்றி கிடைக்கவில்லை? என்ன செய்திருந்தால் இந்தத் தோல்வியைத் தவிர்த்திருக்கலாம்? என்பதாக நினைக்கக்கூட நாம் முயல்வதில்லை. நாம் நமது தோல்விக்கு ஆயிரம் காரணங்களைக் கண்டு பிடிக்க முயற்சிக்க வேண்டும். நாம் முயற்சி செய்திருக்கவே கூடாது . ஆசைப்பட்டிருக்கவே வேண்டாம் என்ற நினைப்பைத் தான் நாம் நினைக்கக் கூடாது. -