பக்கம்:நீங்களும் வலிமையோடு வாழலாம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

51


உடலிலே தோன்றும் ஒழுங்கினங்களை இது தடுக்கும் என்றோ, நோயினின்றும் பூரணமாகக் காத்து நிற்கும் என்றோ நாம் கருதிவிடக் கூடாது.

உடல் வலிமையானவன் குறிப்பிட்ட சில வியாதிகளுக்கு ஆளாகாமல் சுகமாக இருப்பன் ; விரைவில் களைப்படை பாமல் சக்தியுடன் விளங்குவான். அதிக எடை கூடி விடாமல் அளவோடு வாழ்வான் . இப்படி பல நன்மைகளுடன் இனிய தன்மைகளுடன் வாழ்வான் என்பது திண்ணம்.

ஆகவே, வலிமை என்பது ஒரு வரப்பிரசாதம். அதன் சிறப்பறிந்து சேர்த்து வாழ்வது சிறந்த அறிவுடைமையாகும்.

6 வலிமை என்றால் என்ன ?

இதுவரை வலிமை என்றால் என்ன என்று அடிப்படைத் தன்மைகளையும் உண்மைகளையும் அறியாமலேயே, கிடைக்கும் லாபத்தையும் கொடுக்கும் ககத்தையும் மட்டும் அறிந்து கொண்டோம்.

உடலின் வலிமை என்றால் என்ன ? அது எந்தெந்த ரூபத்தில் எப்படி வலம் வருகிறது ? எங்கிருந்து அது கடைக் கிறது? எப்படியெல்லாம் அதைப் பெற முடியும் என்று இங்கு காண்டோம்.

உடல் வலிமை என்ன என்று ஒரு வரியில் விளக்கிட, முடியாது. அதைத் தெளிவாகவும் இப்படித்தான் என்று கிட்டவட்டமாகவும் கூறி விட முடியாது.

உடல் வலிமை என்றால் உடலில் உள்ள பல கூறுகள், ஒன்றையொன்றுத் தழுவி, உடன்பட்டு, ஒன்றணைந்து

நீ. வர-4