பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 நீங்காத நினைவுகள்

மறுநாள் கடிதமும் வந்தது. தமிழ்ப் பேராசிரியராக வந்து சேரும்படி கல்லூரி சூலை 5இல் திறக்கப் பெறுகின்றது என்பதையும் அறிந்து கொண்டேன். இது வியப்பினும் வியப்பாக இருந்தது. கல்லூரிப் பணியை விரும்பி விண்ணப்பித்தாலும் கிடைப்பதில்லை. அப்பணி கனவு நிலையிலேயே இருந்தது. இது சட்டை போடாத கம்பன் அடிப்பொடி சா. கணேசனின் திருவருள் என்றே பட்டது. அதை உறுதியும் செய்து கொண்டேன். இறையருளை நினைந்து காரைக்குடிப் பணியை ஏற்றுக் கொள்ள முடிவு செய்தேன்.

கடமைதான் எது? கரிமுகனே வையத்து இடம்நீ அருள்செய்தாய், எங்கள் - உடமைகளும் இன்பங் களுமெல்லாம் ஈந்தாய் நீ யாங்களுனக்கு என்புரிவேம் கைம்மாறு இயம்பு' என்று கணபதியின் அருளை எண்ணிஎண்ணி மகிழ்ந்தேன். கம்பன் திருநாள் காணப்போன எனக்கு ஆற்றுப் படுத்தியவர் கே.எஸ். முத்துவேல் பிள்ளை-1947 கச்சி ஏகம்பன் தன் மூத்த பிள்ளை மூலம் இங்ங்ணம் அருள் புரிந்தான் போலும் என்று நினைத்து,

கல்லாப் பிழையும் கருதாப்

பிழையும் கசிந்துஉருகி நில்லாப்பிழையும் நினையாப்

பிழையும்நின் அஞ்செழுத்தைச் சொல்லாப் பிழையும் துதியாப்

பிழையும் தொழாப்பிழையும் எல்லாப் பிழையும் பொறுத்தருள

வாய்கச்சி ஏகம்பனே'

என்று ஏகாம்பாரநாதனைத் துதித்து தாளாளரிடம் சென்று என்னை உடனே கழற்றி விடுமாறும், ஈராண்டு விடுமுறை தொடர்புரிமையும் (Lien) தருமாறு வேண்டினேன். என் அன்றைய நிலையை எடுத்துக்

8 பா.க. விநாமா. - 21

9 ப.பா : கச்சி ஏகம்பமாலை-9