பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 நீங்காத நினைவுகள்

வேண்டும். 6.2.79 அன்று பல்கலைக் கழக மெரீனா வலகைத்திலுள்ள விருந்தினர் மாளிகையில் வந்து தங்கினார்கள் அவர் அனுப்பின பயண அறிக்கையின்படி 7ஆம் தேதி அன்று முதலில் வை.அ பொன்னையா அவர்களைக் கூப்பிட்டனுப்பினார்கள். அவர் திரும்பிய பிறகு என்னை வருமாறு பணித்தார்கள் 30.679 வரை நான் பணியில் இருக்கலாம் என்றும் அதன்பிறகு தொடர்ந்து நீடிக்கலாம் என்றும் கூறினார்கள். அக்கருத்தினை ஒப்புக்கொண்டு கலைக்களஞ்சிய அலுவலகத்தில் இரட்டையாட்சி நடை பெறுகின்றதென்றும், கோள் சொல்லும் பெருமாளை ஊழியர்கள் ஒருவரும் விரும்பவில்லையென்றம், ஒன்று பெருமாளை மேலாளர் பதவியிலிருந்து நீக்கி துணையாசிரியர் பணியுடன் நிறுத்த வேண்டும் என்றும், அஃதில்லையெனில் என்னை கழகத்தின் செயலாளராக தூரன் இருந்தது போல் பொறுப்பினைத் தரவேண்டும் என்றும், இரட்டையாட்சி கலைக் களஞ்சியப் பணிக்குக் கேடு விளைவிக்கும் என்றும், பெருமாள் தரும் தகவலுக்கு மதிப்பு தாராதிருக்க வேண்டும் என்றும் வற்புறுத்திக் கூறினேன் "இரட்டையாட்சி" என்று குறிப்பிட்டபோது அவர் முகக் குறிப்பினால் தவறுதலை உணர்ந்ததாகத் தெரிந்தது. அவர் சொன்னபடி 7ஆம் நாள் இட்ட கடிதம் வந்தது. 30.679 நாள் வரை பதவி நீடிக்கும் என்று குறிப்பிட்டு.

பொன்னையா என்னிடம் தம்மை 30.6.79க்குப் பிறகு முதன்மைப் பதிப்பாசிரியராக இருக்குமாறு தன்னைக் கேட்டார் என்றும், அவர் என் திறமைக்கும் அறிவு நிலைக்கும் அணுகுமுறைக்கும் தாம் முன் நிற்க முடியாததால் மறுத்து விட்டதாகவும் கூறினார்.

நினைவு - 12 : 1979 ல் மேகங்கள் மின்னாது இடித்தது போல், ஒரு நல்ல தேன் கூட்டத்தைக் கலைத்ததுபோல், கலைக் களஞ்சியப் பணி நிறுத்தப் பெற்றது என்றும், ஒரு மாத அறிவிப்பிற்குப் பதிலாக ஒரு மாத ஊதியம் காசோலை மூலம் அனுப்பப் பெறுகிறது என்றும் எனக்குப் பதிவு அஞ்சல் மூலம் கடிதம் வந்தது எல்லோருக்கும் இப்படியே அனுப்பப் பெற்றிருக்க வேண்டும் என ஊகித்துக் கொண்டேன். திருவேங்கடவன் ஒரு நல்ல