பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134

நீங்காத நினைவுகள்

(2)

(3)

(4)

(5)

நான் கலைக்களஞ்சியத் தலைமைப் பதிப்பாசிரியர் பொறுப்பில் இருந்தபோது அலுவலகப் பொறுப்பு என்னிடம் இல்லை

இரட்டை ஆட்சி நடைபெற்றது திரு பெருமாள் என்பவர் வித்தியாலயத்திலிருந்து அனுப்பப்பட்டவர். அலுவலக மேலாளர் திரு. பிச்சாண்டி என்பவர் கணக்கர் திரு. வச்சிரவேலு என்பவர் தட்டச்சு செய்பவர். திரு. பெருமாள் என்கீழ் துணைப் பதிப்பாசிரியராகவும் இருந்தார். இவருக்குத் தமிழ் தெரியாது. ஆங்கிலமும் சுமார்: இங்கிதமே தெரியாத அபூர்வ மனிதர். இவரிடம் கோள் சொல்லும் பண்பையும். புறங்கூறும் தன்மையையும், எந்தவித ஆற்றலின்மையையும் கண்ட பிற ஊழியர்கள் இவரை அடியோடு வெறுத்தனர்.

கோட்செவிக் குறளை காற்றுடன் நெருப்பு"

என்ற ஒளவைப் பாட்டியின் வாக்கை நினைத்துக் கொண்டேன். வாரந்தோறும் அய்யா அவர்கட்கு "வீண் புகார் கடிதங்கள்" எழுதி வருபவர் என்று கருத்துக் கொண்டிருந்தனர். அலுவலகப் பிடிப்பு தமக்கு இருந்த மாயத் தோற்றத்தினால் எவரையும் இவர் மதிப்பதில்லை. இவரது புகார் கடிதங்களின் பலனாக அடியேனது பணி "ஐயக் கண்ணுடன்" நோக்கப்பட்டது. இதனை நன்கு அறிந்தும் அய்யாவின்மீது கொண்டிருந்த மதிப்பு. மரியாதை இவற்றின் காரணமாக வாளா இருந்து விட்டேன்.

கலைக்களஞ்சியப் பணி எனக்கு இல்லாமல் செய்த ஏழுமலையான் வேறு தெய்வப் பணியை எனக்கு நல்கியுள்ளான். இதுகாறும் களஞ்சியப் பணி துறந்த பிறகு 52 நூல்களை வெளியிட்டு தமிழ்ப்பணி புரிவதற்கு

19

கொன்றை வேந்தன் - 24