பக்கம்:நீங்காத நினைவுகள்-2.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

308 நீங்காத நினைவுகள் திருமலையில், இறைவனுக்குக் கலியாண உற்சவமாகக் கொண்டாடினார். திருமதி இலக்குமி ஜகந்நாத ரெட்டி பிரசாதம் இலட்டு, திருமால் வடை) அனுப்பி வைத்தார்கள். நான் துணைவேந்தர் இல்லம் சென்று அவரை வணங்கி வந்தேன். நினைவு 16 பல்வேறு முறைகளில் பல்கலைக்கழக வளர்ச்சியில் பெரும் பணியாற்றிய துணைவேந்தர் டாக்டர் ரெட்டி ஆசிரியர்களின் நியமனத்தில் காட்டிய கிறுக்குத்தனத்தால் - தான்றோன்றித்தனத்தால் அவரது புகழ் கோபுரம் தரை மட்டமாகச் சரிந்து விழுந்தது. இது பல்லோருக்கும் வருந்தத்தக்க செய்தியாக அமைந்தது. தமிழ்த்துறை, உளவியல்துறை ஆகியவற்றில் நடைபெற்ற முறைகேடுகள் முன்னர்க் குறிப்பிடப் பெற்றன. (1) இயற்பியல் துறை : (அ) இத்துறையின் பேராசிரியரின் பதவி தனியாகப் பெரிய எழுத்துகளில் இரண்டு பத்திகளைச் சேர்த்த இடத்தில் விளம்பரப்படுத்தப் பெற்றது. இது நியாயமன்று என்பது வெள்ளிடை மலை. துறையிலுள்ள டாக்டர் P. ஜெயராம ரெட்டி, டாக்டர் S.V.J. இலட்சுமணன் ஆகிய இருவர் மட்டிலுமே விண்ணப்பித்திருந்தனர். பேட்டி நடைபெற்ற மறுநாளே ஆட்சிக்குழுக் கூட்டம் நடைபெற ஏற்பாடு. டாக்டர் இலட்சுமணன் ஐதராபாத் உயர்நீதி மன்றத்தில் ரிட் வழக்கு கொடுத்தார் ஆட்சிக் குழுவின் நிகழ்ச்சி நிரலின் முதற்பொருள் இயற்பியல் பேராசிரியர், நியமனம், கூட்டத்தில் இந்தப் பொருள் முடிவு செய்யப் பெற்றதும் டாக்டர் P ஜெயராம் ரெட்டி நியமிக்கப் பெற்றதாக ஆணை தட்டச்சு செய்யப்பெற்று பதிவாளர் கையெழுத்தாகி ஜெயராம ரெட்டியிடம் சேர்ப்பிக்கப் பெற்று, அவரும் பணியில் சேர்ந்து விட்டார். எந்தப் பல்கலைக்கழகத்திலும் இப்படி அசுர வேகத்தில் நியமனம் நடைபெற்றிராது. உலகம் கேட்டிராத முறை இது ஆணவத்தின் கொடுமுடியில் நடைபெற்ற செயல் இது. வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்ற வழக்காகி விட்டது. பதவி தகுதியுள்ளவருக்குத்தான் 24 பல துறைகளில் பதவிகள் காலியாக இருந்தன. அவற்றை விளம்பரம் செய்யாமல் இதற்கு மட்டிலும் என்ன அவசரம்? .