பக்கம்:நீங்காத நினைவுகள்-2.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

312 நீங்காத நினைவுகள் நினைவு - 17 டாக்டர் ரெட்டியை ஓர் இதய மருத்துவர் என்று சொல்லலாம். கல்வி உலகிற்கு ஓர் இதயம் போன்றிருக்கும் பல்கலைக்கழகத்தின் தூய்மையைக் காத்தவர். அதன் சுற்றுப்புறச் சூழ்நிலையையும் கட்டடத்தின் உட்புறச் சூழ்நிலையையும் பேணிக் காத்தவர். சிலசமயம் அவர் ஏறவும் இறங்கவும் பயன்படுத்தப்படும் மின்-ஏணியைப் (Electric lift) பயன்படுத்தாமல் படிக்கட்டுகளில் கால்நடையாகவே ஏறுவார். தாம் செல்லும் வழியில் கட்டிடத்திற்குள் ஒரு சிறு காகிதத் துண்டு கிடந்தாலும் அதைக் குனிந்து எடுத்து அதை ஒரு மூலையில் வைக்கப் பெற்றுள்ள குப்பைத்தொட்டியில் போடுவார். பலருடைய கவனத்தை ஈர்ப்பதற்காக மெதுவாகவே இதைச் செய்வார். நல்லெண்ணத்தோடுதான் இதைச் செய்வார். பிறரும் இவ்வாறு செய்யவேண்டும் என்பதற்காகவே செய்து காட்டுவார். இதைச் சில எழுத்தர்கள். கடைசிநிலை ஊழியர்களில் யாரோ ஒருவர் துணைவேந்தர் செய்யும் பாவனையில் செய்து காட்ட பிறர் இதைக் கண்டு நகைப்பார். இச்செயல் நாடகபாணியில் நடைபெறுவதால் நகைப்பிற்கு இடமாகிச் சிரிப்பை விளைவிக்கும். இச்செயல் ஒரு போலி நடிப்பாகத் (Mimicry) தோன்றும். இவரையும் இவர்காலத்தில் பதிவாளராக இருந்த திரு. M.K. இராமகிருட்டிணனையும்" சில நகைச்சுவைப் பேராசிரியர்கள் டாக்குக்கலாட்-சாங்கோபான்சாவாக உருவகப்படுத்திப் பேசுவதுண்டு. துணைவேந்தர் தெலுங்கர் இல்லை, தமிழர், பதிவாளர் ஒரு மலையாளி கேரளத்தைச் சேர்ந்தவர். வட்டரங்குகளில் சிங்கம், புலி, யானை போன்ற மிருகங்களை அடக்கியாள்பவர் பெரும்பாலும் மலையாளிகளாகவே இருப்பர். இக்காட்சியை நினைந்தவண்ணம் சிலர் துணைவேந்தரைச் சிங்கமாகவும், பதிவாளரை அதை நெறிப்படுத்தும் மலையாளியாகவும் உருவகப்படுத்திப் பேசுவதும் உண்டு. பொதுவாக இத்தகைய கேலிப்பேச்சில் உண்மையும் இருக்கும். ஆனால் எவரும் இருவர் உள்ளத்தையும் துன்புறுத்தும் 26 இவர் துணைவேந்தரிடம் தனிச் சலுகைப் பெற்றவர். ஊதியத்துடன் பல்கலைச் செலவில் மூன்று மாதமோ ஆறு மாதமோ இங்கிலாந்து சென்று நிர்வாகப் பயிற்சி பெற்று வந்ததாக நினைவு.