பக்கம்:நீங்காத நினைவுகள்-2.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

":36 நீங்காத நினைவுகள் சந்தித்து அவருடன் உரையாடினேன். "ஐயா. நான் இருந்தபோது அழகப்பர் அறத்தின் நிதிநிலை சரியாக இல்லை. ஐந்தாண்டுகட்குப் பின் இப்போது நிதிநிலை எவ்வாறு உள்ளது?" என்று வினவினேன். அவரும், "டாக்டர். ரெட்டியார், நீங்கள் இருந்தபோது அறம் மாதத்திற்கு 75 ஆயிரம் வட்டிகட்ட வேண்டியிருந்தது. இப்போது அறத்திற்கு 75 ஆயிரம் வட்டி வருகின்றது என்று இரத்தினச் சுருக்கமாகச் செப்பியது. இன்றும் என் மனத்தில் பசுமையாகவே உள்ளது. ஒரு பொருளாதார நிபுணர் கணிதப் பேராசிரியர்போல் விளக்கிய திறன் வேறு எவரிடம் காணமுடியும்? இத்தகைய தனித்தன்மை வாய்ந்தவர் தாளாளர் செட்டியார் அவர்கள். நினைவு 3 : திரு. G.M.CTV, வேங்கடாசலம் செட்டியார் தம் நிர்வாகத்தில் பணிபுரிபவர்களின் திறமை, நடத்தை செயல்திறன், முதலியவற்றை விரைவில் அளந்தறிந்து கொள்வதில் சமர்த்தர். எப்படியோ என் திறமை யோக்கியதை முதலியவற்றை மதிப்பீடு செய்து அறிந்து கொண்டு விட்டார். அக்காலத்தில் வள்ளல் அழகப்பர் நிறுவனங்களில் பணியாற்றுபவர்களில் நான் ஒருவனே எழுத்துலகில் பணியாற்றிப் புகழோங்கி நின்றவன் என்பதை அறிந்து கொண்டு விட்டார். திரு. இராய.சொ. திரு. சா.கணேசன் கம்பன் அடிப்பொடி திரு. சொ. முருகப்பா இவர்களுடன் நெருங்கிப் பழகியதையும் தினமணிச்சுடர் ஞாயிறு மலர், தமிழ் நாடு ஞாயிறு மலர் சில சமயம் அமுதசுரபி, கலைமகள். இவற்றில் கட்டுரைகள் வெளிவந்து கொண்டிருந்ததையும், தமிழ்ப் பயிற்றும் முறை, அறிவியல் பயிற்றும் முறை வள்ளல் அழகப்பருக்கு அன்புப் படையல். கல்வி உளவியல் போன்ற பணியாற்றும் துறைக்குப் பயன்படக்கூடிய நூல்களையும் கண்டு என்னை நன்கு அறிந்து கொண்டு விட்டார். "காலமும் கவிஞர்களும்" என்ற கட்டுரை நூலையும் வெளியிட்டு இவருக்கு அன்புப் படையாக்கியிருந்தேன். "இவன் சிறந்த உழைப்பாளி: தானுண்டு தன் வேலையுண்டு என்றிருப்பவன்' என்பதை நன்கு தெரிந்து வைத்திருந்தார். இதனால் என்மீது தனிப்பட்ட முறையில் பாசமும், நேசமும், மதிப்பும், மரியாதையும் கொண்டிருந்தமை பல நிகழ்ச்சிகளால் அறிந்து கொள்ள முடிந்தது. -