பக்கம்:நீங்காத நினைவுகள்-2.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232 l நீங்காத நினைவுகள் தயங்கினேன். கல்லூரியில் தாளாளர் அலுவலகத்தில் சந்திக்கத் தயாரானேன். இச் செய்தியை திரு. இராய.சொ. மூலமும் சொல்லி யனுப்பியிருந்தார். சா.க. எச்சரிக்கையை எடுத்துக்கூறி என் தயக்கத்தைத் தெரிவித்தேன். ரெட்டியார் துணிவாகச் செல்லுங்கள். ஏதாவது அசம்பாவிதம் நடைபெற்றால் நான் முன்னின்று காப்பேன்" என்று கூறி கானாடு காத்தான் போகுமாறு பணித்தார். "அவர் என்னிடம் சொல்லியதைப் பார்த்தால் ஏதோ விஷயம் உங்களிடம் சொல்லப் போவதாகத் தெரிகின்றது" என்றும் சொன்னதால் துணிவு பிறந்தது. - நினைவு 6 கானாடுகாத்தான் சென்று தாளாளரிடம் பேசிய பிறகு அச்சந்திப்பு என் நன்மைக்காகவே என்பது தெரியவந்தது. மிகவருந்தினேன். ஒருநாள் காலை 7.30க்குச் சிற்றுண்டியை முடித்துக் கொண்டு ஒரு மணி நேரம் தாமதமாக வருவதற்கு இசைவு கோரி முதல்வருக்குச் செய்தியனுப்பிவிட்டு கானாடு காத்தான் சென்று தாளாளர் இல்லத்தை அடைந்தேன். வீட்டிலுள்ள வேலையாள் செட்டியார் நீராடுவதாகத் தெரிவித்தான். நான் தாழ்வாரத்தில் ஒரு பக்கமாக ஒதுங்கி நின்றேன். செட்டியார் நீராடி முடித்தபிறகு - வெளியில் வரும்போது - என்னைக் கீழ்ப்பார்வையால் கண்டு விட்டார். காணாதவர்போல் சென்று அரைமணி நேரத்தில் பூசையை முடித்துக்கொண்டு அமர்ந்து கொண்டு வேலையாளிடம், "பேராசிரியர் ரெட்டியார் வந்து கொண்டிருக்கின்றார் உள்ளே வரச்சொல்" என்று சொல்லி யனுப்பினார். நானும் உள்ளே சென்று வணக்கம் தெரிவித்து நின்றேன். அமருமாறு பணித்தார். அமர்ந்தேன். செட்டிவீட்டில் மேசை நாற்காலி முதலியவை இரா. நல்லவிரிப்பு போடப் பெற்றிருக்கும் உள்கட்டிலும் வெளிக்கட்டிலும் உள்கட்டில்தான் நாங்கள் உட்கார்ந்தோம். சமையல்காரனிடம் "இரண்டு தட்டுகள் கொணர்க என்று சொல்ல, அவனும் இரண்டு தட்டுகள் கொணர்ந்து வைத்தான். நான் சிற்றுண்டியை முடித்துதான் வந்ததாகச் சொன்னேன். பத்துக்கல் தொலைவு வந்தபிறகு அது வயிற்றில் இராது இங்கும் கொள்ளலாம்" என்றார்.