பக்கம்:நீங்காத நினைவுகள்-2.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் G.N. ரெட்டி 235 திரு. . சென்னாரெட்டி டாக்டர் பட்டம் பெற்றவுடன் அவர் கீழ்த்திசை ஆய்வுக் கழகத்திற்கு இயக்குநரானார். இலக்குமி நாராயணன் பேராசிரியர் பதவி கிடைக்காததால் அவருக்கு டாக்டர் பட்டம் இல்லை. அவர் தம் பணியைத் துறந்து டில்லி மாநகரிலுள்ள வேங்கடேசுவரா கல்லூரியின் முதல்வராகப் பணியேற்றுக் கொண்டார். டாக்டர் G.N. ரெட்டி அமெரிக்காவில் விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தில் (1962-64) விருந்து விரிவுரையாளராகப் பணியேற்றார். t - இக்காலத்தில் விசாகப்பட்டினத்தில் ஓய்வு பெற்ற இலக்குமிகாந்தம் என்பாரை ஒப்பந்த முறையில் அவருக்கு டாக்டர் பட்டம் இல்லை பேராசிரியராகக் கொணர்ந்தார்கள். அவர்காலத்தில் டாக்டர் G.N. ரெட்டி அமெரிக்காவிலிருந்து திரும்பியதும்துணைப் பேராசிரியராக (Reader) உயர்ந்தார். 1964-65 ஒப்பந்த முறையின் காலம் முடிந்ததும் பேராசிரியர் இலக்குமிகாந்தம் ஓய்வானார். இப்போது டாக்டர் G.N. ரெட்டி 1965 முதல் பேராசிரியர் துறைத் தலைவராகப் பதவி உயர்வு பெற்றார். 1984 வரை பேராசிரியராக இருந்தவர். 1978-79 கல்லூரித் துணை முதல்வராகவும். இரண்டாண்டுகள் (1981-83) முதல்வராகவும் இருக்கும் வாய்ப்பு கிடைத்தது. 1981-84இல் பல்கலைக் கழக ஆட்சிக்ழு (Syndicate) உறுப்பினராகவும், 1966-75 இல் கீழ்த்திசைக் கல்வித்துறையில் தலைவராகவும் (Dean), (1977-78இல் பல்கலைக்கழக வெளியீடுகளின் கெளரவ இயக்குநராகவும் இருந்து பல்புகழ் பெற்றார்; காரணம் "உலகத்தோடொட்ட ஒழுகல்" 140) என்ற வள்ளுவர் வாக்கைக் கடைப்பிடித்தார். செல்வர்களும் பதவியில் உள்ளவர்களும் அடக்கத்தைக் கடைப்பிடித்தல் சிறப்பு என்பது வள்ளுவர் வாய்மொழி. "எல்லார்க்கும் நன்றாம் பணிதல்" 125 என்பது பொய்யாமொழி. பதவிகள் வகிக்கும்போது எல்லா நிலைகளிலும் நடுவு நிலைமையைக் கடைப்பிடித்து ஒழுகியவர்.