பக்கம்:நீங்காத நினைவுகள்-2.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேலும் 岛婚莎 நூலை శ { புதுமையைக கையாண்டிருக்கிறார்கள். பொதுவாக பல பெருமக்களின் சிறப்புக்களை, பெருமைகளை எடுத்துச் சொல்லும் நூலாக அமைந்துள்ளது என்றாலும், நாற்பது ஆண்டுகளுக்கு மேலான தனது வாழ்க்கை வரலாற்றையும் ஊடுபாவைப் போல இணைத்திருப்பது ஒரு அருமையான நெசவுத் திறனாக அமைந்துள்ளது. துறையூர் உயர்நிலைப்பள்ளி துவங்கி முடிவில் திருவேங்கடம் பல்கலைக்கழகம் வரை - பின் 15 மாதங்கள் தமிழ்க் கலைக்களஞ்சிய தலைமைப் பதிப்பாளராகப் பணியாற்றியது உட்பட பல்வேறு கல்வித் தளங்களில் அவரது ஆக்கமும் ஊக்கமும் செயற்பாடுகளும் நீக்கமற நிறைந்து பரிமளித்திருக்கின்றன. - இக்காலகட்டங்களில் அவரோடு தோழமை பூண்டவர்கள், அவர் தொண்டுக்குத் துணைபுரிந்தவர்கள், ஏன், தொல்லை கொடுத்தவர்கள் உட்பட பலரின் குணச்சித்திரங்கள் இந்நூலில் அகச்சித்திரங்களாகத் தீட்டப்பட்டுள்ளன. பேராசிரியர் சுப்புரெட்டியார் அவர்கள் அமைதியான ஒரு அறிவுப் பெட்டகம். இலக்கியக் கருவூலம். சிந்தனைச் சுரங்கம் என்ற சிறப்புகளுக்கு உரியவர் என்றாலும், இந்த நூலின் மூலம் மனிதர்களை எப்படி உணரவேண்டும். அவர்களை எப்படி ஆராயவேண்டும் என்ற மனிதநேய தத்துவத்தை உணர்த்தும் ஆய்வாளராகவும் விளங்குகிறார்கள். மனிதனின் சிறப்பியல்புகளை வெளிப்படுத்துகிற போதும், சில குறைகளைத் தெரிவிக்கின்ற போதும் எப்படிச் சொல்லவேண்டும், அதிலே அடக்கமும், அன்பும், நயமும் எப்படி இணைந்து வரவேண்டும் என்பதற்கு அருமையான தமிழ்நடையில் இலக்கணம் படைத்துள்ளது இந்த நூல். இருளும், ஒளியும் கலந்த உலகம் போல நல்லதும் கெட்டதும் கலந்தவன்தான் மனிதன் என்ற எச்சரிக்கையோடு தாம் உறவாடிய vii