பக்கம்:நீங்காத நினைவுகள்-2.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262 நீங்காத நினைவுகள் ஆய்வுக் கட்டுரைகளை அனுப்பி வைத்தேன். இவை கருத்தரங்கில் படிக்கப் பெற்றன. டாக்டர் சஞ்சீவி முத்தொள்ளாயிரத்தில், கச்சி ஒருகால் மிதியா, ஒருகாலால் தத்துநீர்த் தண்உஞ்சை, தான்மிதியாய், பிற்றையும் ஈழம் ஒருகால் மிதியா வருமேநம் கோழியர்கோக் கிள்ளி களிறு என்ற பாடலைத்தம் ஆங்கிலப் பேச்சுக்குக் கருவாக அமைத்துக் கொண்டு அற்புதமாகப் பேசி அனைவரையும் மகிழ்வித்தார், நினைவு திருப்பதிப் புல்கலைக் கழகத்தில் 1970-71 இல் தமிழ் முதுகலை (எம்.ஏ, எம்ஃபில், பிஎச்டி பட்டங்கட்கு வழிவகை செய்யப் பெற்றது - புத்து ஆண்டுகள் முயன்று ஆண்டொன்றுக்கு பத்தாயிரம் தமிழக அரசு தமிழ் வளர்ச்சிக்காக மானியம் வழங்கியதால் 1973-74 இல் தமிழ்த் தமிழக அரசு நிதி உதவி துறையில் முதல் கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்தேன். உலகுக்கென்று ஒரு பொது நூலை அளித்த பெருமை தமிழகத்திற்கு உண்டு. இதுபற்றித் தமிழ் மக்கள் பெருமை அடையலாம். இத்தகைய பெருமை திருவள்ளுவருக்கு உண்டு இவரைத் தமிழ் நாட்டளவில் கட்டுப்படுத்தலாகாது. அது தளையாகும் சிறையுமாகும் வள்ளுவன் தன்னை உலகினுக் கேதந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு' - என்று பாரதியாரும் பாடியுள்ளாரல்லவா? இதனால் திருக்குறள் முதல் கருத்தரங்குப் பொருளாகத் தேர்ந்தெடுக்கப் பெற்றது. பல்கலைக்கழக மரபுப்படி துணைவேந்தர் தலைமை வகித்தார். வள்ளுவனுக்கே தம் வாழ்க்கை முழுவதையும் அர்ப்பணித்து, தம்மகனுக்குத் திருவள்ளுவன் என்ற பெயரையும் இட்டு மகிழ்ந்த இவையும் இவை போன்ற பிறவும் கட்டுரைகள் eெdedpaper, என்ற தலைப்பில் வெளிவந்துள்ளன. 7 முத்தொள்ளாயிர விளக்கம் பாடல் 63 8 பாக, செந்தமிழ் நாடு - 7