இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
4
சனி நீராடு.16
ஞயம்பட உரை.17
இடம் பட வீடு எடேல்.18
இணக்கம் அறிந்து இணங்கு19
தந்தை தாய்ப் பேண்.20
நன்றி மறவேல்.21
பருவத்தே பயிர் செய்.22
மன்று பறித்து உண்ணேல்.23
இயல்பு அலாதன செயேல்.24
அரவம் ஆட்டேல்.25
இலவம் பஞ்சில் துயில்.26
வஞ்சகம் பேசேல்.27
அழகு அலாதன செயேல்.28
இளமையில் கல்.29
அறனை மறவேல்.30
அனந்தல் ஆடேல்.31
கடிவது மற.32
காப்பது விரதம்.33
கிழமைப்பட வாழ்.34
கீழ்மை அகற்று.35
குணமது கைவிடேல்.36
கூடிப் பிரியேல்.37
கெடுப்பது ஒழி.38
கேள்வி முயல்.39
கைவினை கரவேல்.40
கொள்ளை விரும்பேல்.41
கோது ஆட்டு ஒழி.42
கௌவை அகற்று.43
சக்கர நெறி நில்.44
சான்றோர் இனத்து இரு.45
சித்திரம் பேசேல்.46
சீர்மை மறவேல்.47