8
கற்பு எனப்படுவது சொல் திறம்பாமை. 14
காவல்தானே பாவையர்க்கு அழகு. 15
கிட்டாதாயின் வெட்டென மற. 16
கீழோர் ஆயினும், தாழ உரை. 17
குற்றம் பார்க்கின், சுற்றம் இல்லை. 18
கூர் அம்புஆயினும், வீரியம் பேசேல். 19
கெடுவது செய்யின், விடுவது கருமம். 22
கேட்டில் உறுதி கூட்டும் உடைமை.21
கைப் பொருள்தன்னின், மெய்ப் பொருள் கல்வி.22
கொற்றவன் அறிதல் உற்ற இடத்து உதவி.23
கோட் செவிக் குறளை காற்றுடன் நெருப்பு.24
கௌவை சொல்லின், எவ்வருக்கும் பகை.25
சந்ததிக்கு அழகு, வந்தி செய்யாமை.26
'சான்றோர்' என்கை ஈன்றோர்க்கு அழகு.27
சிவத்தைப் பேணின், தவத்திற்கு அழகு.28
சீரைத் தேடின், ஏரைத் தேடு.29
சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல்.30
சூதும் வாதும் வேதனை செய்யும்.31
செய் தவம் மறந்தால், கைதவம் ஆளும்.32
சேமம் புகினும், யாமத்து உறங்கு.33
சை ஒத்து இருந்தால், ஐயம் இட்டு உண்.34
சொக்கர் என்பவர் அத்தம் பெறுவர்.35
சோம்பர் என்பவர் தேம்பித் திரிவர்.36
தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை.37
தாயின் சிறந்த ஒரு கோயிலும் இல்லை.38
திரை கடல் ஓடியும் திரவியம் தேடு.39
திராக் கோபம் போரா முடியும்.40
துடியாப் பெண்டிர் மடியில் நெருப்பு.41
தூற்றும் பெண்டிர் கூற்று எனத் தகும்.42