பக்கம்:நீதிதேவன் மயக்கம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 காட்சி - 2 அறிஞர் அண்ணா இடம் : இராவணன் மாளிகை இராவணன் கம்பீரமாக அமர்ந்திருக்கிறான். அவன் முன்னால் பழ வகைகளும், மதுக்கிண்ணமும் இருக்கின்றன. பாடகன் ஒருவன் அவர் எதிரே அமர்ந்து பாடிக் கொண்டிருக்கிறான். இராவணன். மதுவை சுவைத்தும் பாடலை ரசித்தபடியும் இருக்கிறான். பாடல் முடிகிறது. நீதிதேவனின் பணியாள் வருதல். அவனைக் கண்ட இராவணன் இராவணன் : யாரப்பா, நீ? பணியாள்: நீதிதேவன் சபையிலே, சுவடி ஏந்துவோன். இராவணன் : ஓகோ! சுமைதாங்கியா? (பணியாளனைப் பார்க்கிறான். அவன் முறைப்பாக இருப்பது கண்டு) கோபியாதே அப்பனே! வேடிக்கைக்குச் சொன்னேன். அதுசரி, நீதிதேவன் சபையிலே சுவடி ஏந்துவோனுக்கு, இந்த அக்ரமக்காரன் வீட்டிலே, என்னப்பா வேலை? பணியாள்: வேலையுமில்லை, சொந்தமுமில்லை, சேதி சொல்ல வந்திருக்கிறேன். இராவு : ஓகோ! சேதி சொல்ல வந்திருக்கிறாயா? அவனை விடவா? பணி : எவனை விட இராவ: முன்பு என்னிடம் தூது சொல்ல வந்தானே, ஹனுமான் அவனை விட என்ன சொல்ல வந்திருக்கிறாய்? பணி: உங்கள் மீது அளிக்கப்பட்ட தீர்ப்புகளை, மறு விசாரணை செய்யும்படி, ஆண்டவன் கட்டளை இட்டிருக்கிறார்.