பக்கம்:நீதிதேவன் மயக்கம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீதிதேவன் மயக்கம் 45 இரா: [கம்பரை நோக்கிக் கேலியாக] நான் கவியல்ல, குழைய, நெளிய நான் இப்போது எடுத்துரைத்தது வாய்மை - என் அகராதிப்படி " [தலையை நிமிர்த்தி இலங்கேசனைக் கெம்பீரமாகப் பார்த்து] இலங்காதிபனே! ஆளுக்கேற்றபடி, வேளைக்கேற்றபடி, வழக்குக்கேற்றபடி, துலாக் கோலையும், படிக்கற்களையும் மாற்றுவதும், புதுப் பிப்பதும் என்ற நிலை பிறந்தால், என்ன கதியாகும் நீதி? இரா: அதற்கு அஞ்சி, காலச் சுமை வீழ்ந்து வீழ்ந்து சாய்ந்து போன துலாக் கோலில், தேய்ந்து போன படிக்கற்களைப் போட்டு, நிறை பார்ப்பது நீதியாகுமா, தேவா நீதி: சற்று கோபத்துடன்] சாய்ந்த தராசு! தேய்ந்த படிக்கற்கள், முதன் முறையாக இம்மன்றத்தின் முன் கூறப்பட்ட குற்றச்சாட்டுகள். இரா : இதுதானே நீதிதேவா, முதல் புனர் விசாரணை நான் பேசினேன் முதலில், பிறர் பிறகு பேசுவர். முடிவு என்ன? கூவலை இல்லை! மறு விசாரணை வந்ததே அதுபோதும் தேவனே! மாசு நீதிமன்றத்துக்கும் உண்டு, அளிக்கப்பட்ட தீர்ப்புகளெல்லாம் மாற்ற முடியாதன அல்ல என்ற பல புது உண்மைகள் ஏற்பட்டு விட்டன அல்லவா, அதுபோதும், என் களிப்புக்குக் காரணம் அதுதான். [நீதிதேவன் எழுந்து கோபமாக] நீதி : பிறகு கூடுவோம்.