பக்கம்:நீதிதேவன் மயக்கம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீதிதேவன் மயக்கம் அக : [திகைத்து ] தாயே! என்ன வார்த்தை பேசுகிறீர். 57 சீதை : பைத்தியக்காரி! இரக்க சுபாவமா அவருக்கு! என்னைக் காட்டுக்குத் துரத்தினாரே, கண்ணைக் கட்டி அப்போது நான் எட்டு மாதமடி முட்டாளே கர்ப்பவதியாக இருந்த என்னைக் காட்டுக்கு விரட்டின கல்மனம் கொண்டவரை, இரக்கமுள்ளவர் என்று சொல்கிறாயே. எவனோ, எதற்காகவோ, என்னைப் பற்றிப் பேசினதற்காக ஒரு குற்றமும் செய்யாத என்னை - தர்ம பத்தினி என்ற முறையிலே அவருடன் 14 வருஷம் வனவாசம் செய்த என்னை - இராவணனிடம் சிறை வாசம் அனுபவித்து அசோக வனத்திலே அழுது கிடந்த என்னை, கர்ப்பவதியாக இருக்கும்போது, காட்டுக்குத் துரத்திய காகுத்தனைக் கருணாமூர்த்தி என்று புகழ்கிறாயே! கல்லுருவிலிருந்து மறுபடியும் பெண் ஜென்மம் எடுத்தது இதற்காகவா? கடைசியிலும் என்னைச் சந்தேகித்து, பாதாளத்தில் அல்லவா புகவைத்தார். அப்படிப்பட்டவரை, அகல்யா எப்படியடி, இரக்கமுள்ளவர் என்று கூறுகிறாய்? வில்வீரன் என்று புகழ்ந்து பேசு, சத்துரு சங்காரன் என்று பேசிச் சாமரம் வீசு, என்ன வேண்டுமானாலும் பேசு புகழ்ச்சியாக, ஆனால் இரக்கமுள்ளவர் என்று - மட்டும் சொல்லாதே இனி ஒரு முறை - என் எதிரில் "பிராணபதே! என்னைப் பாரும்! இந்த நிலையிலா, என்னைக் காட்டுக்குத் துரத்துகிறீர்? ஐயோ! நான் என்ன செய்தேன்? குடிசையிலே இருக்கும் பெண்களுக்குக் கூட, கர்ப்பகாலத்தில், சுகமாக இருக்க வழி செய்வார்களே! சக்கரவர்த்தியின் பட்ட மகிஷியான எனக்கு இந்தக் கதியா? நான் எப்படித் தாளுவேன் பிரியபதே! என்னைக் கவனிக்காவிட்டால் போகிறது, என் வயிற்றிலுள்ள சிசு - உமது குழந்தை - அதைக் கவனியும். ஐயோ! கர்ப்பவதிக்குக் காட்டு வாசமா? ஐயோ! உடலிலே வலிவுமில்லை