இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அறிஞர் அண்ணாவின் வாழ்க்கைக் குறிப்புகள்
சி. என். அண்ணாத்துரை
| தோற்றம் | - | 15 - 9 -1909 |
| தந்தை | - | நடராசன் |
| தாய் | - | பங்காரு அம்மாள் |
| பிறந்த ஊர் | - | சின்ன காஞ்சிபுரம் |
| வாழ்க்கைத் துணை |
- | இராணி அம்மையார் |
| புனைபெயர் | - | சௌமியன், சமதர்மன், சம்மட்டி, ஒற்றன், ஆணி, பரதன் |
| 1929 - 1934 | - | சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பி.ஏ ஆனர்சு பொருளியல் பட்டப்படிப்பு |
| 11-2-1934 | - | முதல் சிறுகதை ஆனந்த விகடனில் வெளிவந்தது |
| 1-2-1936 | - | சென்னை பச்சையப்பன் மண்டபத்தில் 'பார்ப்பனர் அல்லாதார் இயக்கமும்காங்கிரசும்' |
| பற்றிச் சொற்பொழிவு | ||
| 1936 | - | சென்னை மாநகராட்சித் தேர்தலில் நீதிகட்சி உறுப்பினராக நிற்றல் |
| 11-4-1937 | - | நீதிக்கட்சிச் செயற்குழு உறுப்பினராதல் |
| 1937 | - | விடுதலை, குடிஅரசு இதழ்களில் துணை ஆசிரியர் பணி |
| 9-12-37 | - | முதற்கவிதை, 'காங்கிரஸ் ஊழல்' விடுதலையில் |
| 26-9-38 | - | இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் மக்களைத் தூண்டி விட்ட |
| குற்றம் சாட்டி நான்கு மாத வெறுங்காவல் |