உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 நீதிநெறிவிளக்கம் IHLGT. FF I) 5 கண்ணுேக் கரும்பா நகைமுகமே காண்மலரா இன்மொழியின் வாய்மையே தீங்காயா-வண்மை பலமா கலங்கனிந்த பண்புடையா ரன்றே சலியாத கற்ப தரு. 1. கண்ணுேக்கு - கண்ணினது (குளிர்ந்த) பார்வையே, அரும்பு - ஆ - முகையாகவும், நகை முகமே - மலர்க்க முகமே, நாண்மலர்ஆ - புதுப்பூவாகவும், இன்மொழியின் - இனிய சொல் லாலியன்ற, வாய்மையே - உண்மையே, தீம் - இனிய, காய்ஆ - காயாகவும், வண்மை - வள்ளன்மையாகிய பெருங்கொடையே, பலம்ஆ - பழமாகவும், நலம் - (இத்தகைய) நன்மை, கனிந்த - மிகுந்த், பண்புடையார் - தற்குணமுடையவர்கள், அன்றே அல்லரோ, சலியாத - (குறிப்ப்றிந்து கொடுத்தலில்) தளர்வில் லாத, கற்ப தரு - கற்பக மரத்தை யொப்பவர்! 2 (கொண்டுகடட்டு வேண்டிற்றிலது) 3. இன்சொல்லும் இனிய முகமும் உடையவனுய் உள்ள முவந்து குறிப்பறிந்து கேளாமுன் கொடுப்பவனே வள்ளலாவான். 4. முகத்தா னமர்ந்தினிது நோக்கி யகத்தான மின்சொ லினதே யறம். ' -குறள்.

இன்சொல் விளைகிலன ஈதலே வித்தாக

வன்சொற் களைகட்டு வாய்மை யெருவட்டி அன்பு:சீர் பாய்ச்சி அறக்கதி ரீனவோர் பைங்கூழ் சிறு காலைச் செய். ” -அறநெறிச்சாாம்.

  • ஏற்ருர்கட் கெல்லாம் இசைநிற்பத் தாமுடைய

மாற்ருர் கொடுத்திருப்ப வள்ளன்மை. ” -பழமொழி. 5. ஈகையின் இலக்கணம் இகிற் கூறப்படும். கண்னேக்கும் நகைமுகமும் அகத்தின் உவப்பை வெளிப்படுத்துவன. மனம், வாக்கு, காயம் என்னும் மூன்ருலும் விரும்பிச் செய்வது ஈகையென்று கொள்க.” -உ. வே. சா.

ஈகையுடையாரைக் கற்பகதருவென உருவகஞ் செய்ததற்கேற்ப விருந்தினரைக் கண்டவழி உளதாம் இனிய நோக்கினை அரும்பாகவும், இன்முகத்தை நாண்மலராகவும், இன்சொல்லைத் தீங்காயாகவும், கொடை யைப் பலமாகவும் கூறுதலின் இது முற்றுருவகவனியாம். இச் செய்யு ளின்கண் அரும்பு, மலர், காய், பலம் எனச் சொல்லத்தொடங்கிய பொருள் களை முறை வழுவாது சொல்லுதலின் இஃது அாதனமாலையணியாம் ;