உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நீதி கேட்டு நெடிய பயணம்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 தொண்டர்களுடைய கால்கள் துவளுகிற நேரத்தில் பார்த்தேன்! என்னுடைய அருமை லாம் துவளுகிற நேரத்தில் பார்த்தேன்! உடன் பிறப்புக்களெல் லட்சோப லட்சம் பேர் மதுரையிலே இருந்து திருச்செந்தூர் வரையிலே 200 கிலோ மீட்டர் தொலைவு சரியான உணவின்றி-உறங்க வசதியின்றி ஓய்வு கொள்ள இடமின்றி வருகின்ற காட்சியை நான் பார்த்தேன். என்னுடைய மனம் பதைத்தது. என்னுடைய அருமை உடன்பிறப்புக்கள் தவறு செய்து விட்டோமோ என்றுகூட எண்ணினேன். என்றாலும் மனதைத் தேற்றிக் கொண்டேன்! என்னுடைய காலிலே இருந்த ரணத்திற்கு-கொப்பளங் களுக்கு மருந்திட்ட டாக்டர் கலாநிதியும், டாக்டர் ராஜாம்பாள் அம்மையாரும், டாக்டர் காஞ்சனா கமலநாத னும் மற்றுமுள்ள டாக்டர்களும் கட்டுக்களை அவிழ்த்து- ஆங்காங்கு பாதையிலேயே எனக்கு சிகிச்சை அளித்த நேரத் தில்—அதைப் பார்த்த நம்முடைய கழக உடன்பிறப்புக்களின் கண்கள் கண்ணீர் சொரிந்தன. கண்ணீர் சொல்லும் கதை நான் எண்ணிக்கொண்டேன், இந்தக் கண்ணீரைவிட வேறு மருந்து என்ன இருக்கிறது என்று! அதே நேரத்தில் இவர்கள் நம்முடைய காயத்தைக் காணுகிறார்கள்; நம்முடைய கஷ்டத்தைப் பார்க்கிறார்கள்; கண்ணீர் விடுகிறார். கள். ஆனால் அவர்கள் தங்களுடைய காயத்தை- தங்களுடைய கஷ்டத்தை நம்மிடத்திலே காட்டிக் கொள்ளா மல் மறைக்கிறார்கள் என்பதையும் புரிந்து கொண்டேன்! ஆனால் ஒன்று. இந்த வழிநடைப் பயணத்தில் லட்சக் கணக்கான தொண்டர்களை நேரடியாகச் சந்திக்கின்ற வாய்ப்பு எனக்குக் கிட்டியது. பொதுக்கூட்டங்களுக்கு அழைப்பார்கள். நிதி கொடுத்தால்தான் வருவேன் என்று நிபந்தனை போடுவேன். எடைக்கு எடை தருகிறாயா என்று கேட்பேன். திருமணத்திற்கு வா ! தேதி கொடு! கேட்பீர்கள். கழக நிதி இரண்டாயிரம் ரூபாய் கேட்டு கட்டியவுடன் என்னிடத்திலே வா என்று சொல்லுவேன். என்று ஆனால் இப்படி என்னை அழைத்தீர்கள். அடிக்கடி என்னை அழைத்துக் கொண்டிருக்கிறீர்களே. உங்களை ஒரு முறை அழைக்கிறேன் - கஷ்டப்பட அழைக்கிறேன் - அல்லல்பட அழைக்கிறேன் — அவதிப்பட அழைக்கிறேன்- வசதிகளற்ற -