உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நீதி கேட்டு நெடிய பயணம்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 ஏற்பட்ட கஷ்ட நஷ்டங்கள் எவ்வளவு என்பதையும் கணக் கிட்டுச் சொல்ல முடியாது. ஆனால் ஒன்று இரண்டினை மாத்திரம் இந்த நேரத்தில் நான் மிகுந்த வேதனையோடு உங்களிடத்திலே குறிப்பிட கடமைப்பட்டிருக்கிறேன். தூத்துக்குடியில் எவ்வளவு எழிற்கோலம்-எழுச்சிக் கோலம் என்பதனை தம்பி கோபால்சாமி இங்கே வர்ணித்துக் காட்டினார். இந்தச் சிறப்பு மிகுந்த நடைப்பயணத்தினுடைய வெற்றிக்கு மாவட்டச் செயலாளர்கள்-அந்தப் பகுதியினு டைய அமைப்புச் செயலாளர் இவர்களை யன்னியில் தம்பி கோபால்சாமியைப் போன்றவர்களுடைய உழைப்பும் பெரும் பகுதி உண்டு என்பதை நான் அறிவேன். மகன் இறந்த கவலையையும் மறந்து! எனினும் அவர் இங்கே வர்ணித்துக் காட்டிய தூத்துக் குடியினுடைய அந்த எழிற் கோலத்திற்கு-எழுச்சிக் கோலத் திற்கு காரணமாக இருந்தவர்களில் ஒருவர் தூத்துக்குடி அய்யாசாமி என்கின்ற நண்பர்; மாவட்டக் கழகத்தினுடைய செயலாளர் கிருஷ்ணன் அவர்களோடும், மற்றுமுள்ள நண்பர்களோடும் ஒத்துழைத்து உறுதுணையாக இருந்து தூத்துக்குடியிலே நம்முடைய நெடிய பயணம் மிகுந்த சிறப் படைவதற்கு பெரும் பாடுபட்டவர். அத்தகைய நிகழ்ச்சிகள் வெற்றிகரமாக அமைய வேண்டுமென்று அவர் உழைத்துக் கொண்டிருந்த பொழுது அவருடைய மூத்த மகன் இருபது வயது நிரம்பியவன் விபத்து ஒன்றிலே சிக்கி மாண்டுவிட்டான். மாண்டுவிட்ட மகனுக்கு இறுதிக்கடன் செலுத்த வேண்டிய நாட்கள் — இன்னும் பத்து நாட்கள் இருக்கின்றன என்ற போதிலும் அவ்வளவு நாள் பொறுத்திருந்தால் நெடிய பயணத்திற்கான பணிகளிலே ஈடுபட முடியாது என் பதற்காக அந்த நினைவுநாளையும் இரண்டு அல்லது மூன்று நாளிலே நிறைவேற்றிவிட்டு மகன் இறந்த சோகத்தை ஒரு மூலையிலே தூக்கி வைத்துவிட்டு நெடிய பயணம் வெற்றி பெற நாளெல்லாம் அந்த அய்யாசாமி உழைத்தார் என்ப தை நான் எண்ணிப் பார்க்கிறேன். இந்த நெடிய பயணத் தில் எனக்கு ஏற்பட்ட துன்பங்கள் அதற்கு முன்னால் கடுகா கத்தான் எனக்குத் தெரிகிறது.