உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நீதி கேட்டு நெடிய பயணம்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

103 பேராசிரியரும் மற்றும் இங்கே வீற்றிருக்கின்ற பெருமக் களும், கழகத்தினுடைய முன்னோடி தலைவர்களும், தோழமை கட்சியினுடைய தலைவர்களும் இங்கே எனக்குச் சூட்டிய புகழாரங்கள் அத்தனையும் என்னுடைய கழுத்திலே அணி வித்த பூ மாலைகளும் எனக்கு அணிவிக்கப்பட்ட பொன் (னடை கைத்தறி ஆடைகளும் இவைகள் அத்தனை யும் அந்தச் செயல் வீரர்களுக்கு அந்தக் கழகக் காளைகளுக்கு - அந்தக் கழக உடன்பிறப்புக்க ளுக்கு- ஏன்! அவர்களுடைய காலடிகளுக்குச் சொந்த மானது என்பதை நான் இங்கே கண்ணீர் மல்கக் கூறக் கடமைப்பட்டிருக்கின்றேன். இந்த நெடிய பயணம் ஏன் தொடங்கப் பட்டது என் பதை நான் மீண்டும் உங்களிடத்திலே விளக்கமாகச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லையென்றே கருதுகிறேன். ஏனென்றால் பேராசிரியர் இங்கே குறிப்பிட்டதைப் போல் நீதிபதி பால் அவர்களால் வெளியிடப்பட்ட அறிக்கை பொதுமக்களுக்கு முதலிலேயே எடுத்துச் சொல்லப்பட்டது. அரசின் சார்பிலே அறிக்கை வைக்கப்பட்ட பிறகு, சட்ட மன்றத்திலே வாதாடிப் பார்த்தாகி விட்டது. மக்கள் மன்றத்திலே கண்டனக் கூட்டங்கள் நடத்தி ஊர் ஊராக தி. மு. கழகத்தின் சார்பிலும் பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பிலும் எடுத்து இயம்பப்பட்டு விட்டது. மக்கள் மன்றத்தை நாடியது ஏன்? இவ்வளவுக்கும் பிறகு, என்னுடைய நண்பர் வீரமணி அவர்கள் இங்கே எடுத்துக் காட்டியதைப்போல் எந்த அரசு ஒரு நீதிபதியை நியமித்து அறிக்கை தரச் சொன்னதோ, அதே அரசு, அந்த நீதிபதியினுடைய அறிக்கை தவறானது என்று வாதிடத் தொடங்கிய பிறகு இனி இங்கே நீதி கேட்டுப் பயனில்லை. மக்கள் மன்றம் செல்லுவோம் என்று மக்களைத் நாடவேண்டிய அவசியம் தி. மு. கழகத் திற்கு ஏற்பட்டது. நீதி அமைச்சரவையிலே இருக்கின்ற ஒரு தம்பி கூடச் சொன்னார், நல்ல யோசனை தான். "நீங்கள் கேட்டு திருச்செந்தூருக்குச் செல்வானேன், எங்களுடைய புரட்சித் தலைவர் எம். ஜி. ஆர். இருக்கிற இடத்திற்கு அல்லவா செல்ல வேண்டும்" என்று என்னைப் பார்த்துக் கேட்டார்! பத்திரிகைகளிலே படித்துப் பார்த்தேன்.