உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நீதி கேட்டு நெடிய பயணம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 பிலேயே சி. பி. ஐ. விசாரணை வேண்டும் என்ற அளவிற்கு நான் போகா ததற்குக் காரணம் அல்லது கழகம் கருதாதற் குக் காரணம் இங்குள்ள நேர்மையான காவல்துறை அதி காரிகளைக் கொண்டே இந்த விசாரணையை இந்த அரசு நடத்தும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் தான். வீரப்பன் பேட்டி ஆனால் 3ம் தேதி இப்படிப்பட்ட ஒரு தந்தியை எதிர்க் கட்சியின் தலைவன் என்ற முறையில் நான் அனுப்பியதற்கு மறுநாள், டிசம்பர் 4-ஆம் தேதி அறநிலையத்துறை அமைச்சர் அருமை நண்பர் ஆர். எம். வீரப்பன் அவர்கள் நிருபர்களு டைய கூட்டத்தைக் கூட்டி, அதிலே தன்னுடைய கருத்துக் களையும், அதிகாரிகள் தந்த அறிக்கைகளையும் எடுத்து வைத் தார். அவருடைய கட்சி ஏடான அண்ணா பத்திரிகை 4-12-80ஆம் தேதி ஏட்டிலே, "திருச்செந்தூரில் நடந்தது என்ன?” “இறந்த வரை வைத்து கருணாநிதி நடத்தும் அரசியல் மோசடி' “ஆர்.எம்.வீ. கடும் கண்டனம்" என்ற தலைப்போடு "திருச்செந்தூரில் உண்டியல் எண்ணும்போது நடந்த சம்பவம் பற்றி செய்திகள் வந்துள்ளன நேற்று முதல் எதிர்க்கட்சி தலைவர் அந்த விஷயத்தை. எடுத்துக் கொண்டிருக்கிறார். 39 அடிப்படையே இல்லாத ஆதாரம் ஏதும் இல்லாத- முழுப் பொய்யை ஜோடித்து ஒரு கற்பனைக் கதையை எதிர்க் கட்சித் தலைவர் உருவாக்கி இருக்கிறார். அனைத்திந்திய அண்ணா தி. மு. கழக ஆட்சி மீதும் அறங்காவலர்கள் மீதும் பழி போடும் வேலையில் எதிர்க்கட்சித் தலைவர் ஈடுபட்டுள் ளார். பெரிய கொலை நடந்திருப்பதாக பிரதமருக்கு அவர் தந்தி கூட அனுப்பியிருக்கிறார். (நான் முதலமைச்சருக்கும் தந்தி அனுப்பினேன். ஆனால் அமைச்சர் இப்படிக் குறிப்பிடுகிறார்.) பொறுப்பற்ற முறையில் இப்படிப்பட்ட செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. அங்கே என்ன நடந்தது என்ற உண்மை விவரங்களை அரசின் சார்பில் வெளியிட கடமைப் பட்டுள்ளோம் இந்தச் சம்பவம் நடந்தபோது அங்கே 50, 60 பேர் இருந்திருக்கிறார்கள். அங்கே நடந்த சம்பவம் குறித்து திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவரும், காவல்துறை உயர் அதிகாரியும்