உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நீதி கேட்டு நெடிய பயணம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11 கொலைக்கான காரணங்களை ஆராய்வதும்-விசாரணை வரம்புக்கு உட்பட்ட காரியமேயாகும். கொலைக்கான காரணங்களை ஆராயச் சொல்லித்தான் விசாரணை வரம்பு தரப்பட்டிருக்கிறது. அறங்காவலரும், நிர்வாகிகளும் நடத்திய உண்டியல் திருட்டுக்கு சுப்பிரமணிய பிள்ளை உடந்தையாக இல்லை; றாக மறுப்பு தெரிவிக்கிறார்; அதனால் கொல்லப்படுகிறார். மா எனவே சுப்பிரமணிய பிள்ளை மரணத்திற்கான காரண மும் - காரணஸ்தர்களும்-பால்' அவர்களுடைய விசாரணை வரம்பிற்கு உட்பட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்கள். அந்தக் காரணஸ்தர்கள் மீது கிரிமினல் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்; அவர்கள் அறங்காவலர் குழுவின ராகவும், கோவில் நிர்வாகிகளாகவும் இருப்பதால் நீக்கி வைக்கப்பட வேண்டும்; என்பது இந்த அறிக்கையின் மூடிவான கருத்து. காரணஸ்தர்களால்தான் காரணம்' ஏற்பட்டிருக்கிறது என்பதை மறந்து விடக்கூடாது, காரணம் அரூபமானது. அதன் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. காரணஸ்தர்கள் தான் உருவம் உடையவர்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டுமென்றால்-அது எப்படி விசாரணை வரம்பை (டேர்ம்ஸ் ஆப் ரெபரன்ஸை) கடந்ததாக இருக்க முடியும் என்பதை அரசுதான் நமக்கு விளக்கவேண்டும். விசாரணை வரம்பு மீறப்படவில்லை! விசாரணை வரம்பு எதுவும் மீறப்படவில்லை என்பது நான் தந்த இந்த விளக்கத்தின் மூலம் தெளிவாகிறது. நீதிபதி பால் தெரிவித்துள்ள முடிவான கருத்துக்கள் யாவை? (1) "சுப்பிரமணிய பிள்ளை கோயிலுக்கு வந்து சேரு வதற்கு முன்பே உண்டியல்கள் திறக்கப்பட்டு விட்டன. அதுகண்ட சுப்பிரமணிய பிள்ளை எதிர்ப்பு தெரிவித்து, எண்ணுவதில் கலந்து கொள்ளாமல் அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப் போவ தாகச் சொல்லிவிட்டு ஆய்வகம் சென்று விட்டார். அதன் பேரில் அவர் தாக்கப்பட்டு அவருக்குக் காயங்கள் விளைவிக்கப்பட்டன. அதன் விளைவாக அவர் உணர்விழந்தார். அவரது குரல்வளையை நெறிப்பதற்கான ஒரு முயற்சிகூட செய்யப்பட்டிருக்கலாம். அவர், தற்கொலை