உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நீதி கேட்டு நெடிய பயணம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17 வாதம் செய்வது நியாயம்தானா? அவர் "தொங்க விட இது பயன்படுத்தப்பட்டிருக்க முடியும்" என்று சொல்கிறார். "தொங்கவிட" என்ற அந்தச் சொல்லை ஆழ்ந்து கவனித் தால் ஒரு பிணத்தைத் தொங்கவிட என்று நாம் ஏன் எடுத்துக்கொள்ளக்கூடாது? ராமன் சொன்னதில் முதல் வரியை மாத்திரம் எடுத்துக்கொண்டார்கள்; அவர் மேலும் அதே பாராவில் என்ன சொல்கிறார்? மடிக்கப்பட்டிருந்த வேட்டியின் நீளம் மிகவும் குட்டை என்றும், எந்த முனையிலும் ஒரு முடிச்சுப் போட மட்டுமே பயன்படுத்தி இருக்க முடியும் என்றும், அவ்வாறு போடுவதற் குக் கூடச்சாமர்த்தியம் வேண்டும் என்றும், 7 அடி 6 அங்குலம் உயரத்தில் உள்ள ஒரு குழாயிலிருந்து ஒருவர் தொங்குவதாக கற்பனை செய்து பார்த்தால். அவர் அநேக மாக குழாயின் உயரத்திற்கு தானே எம்பித்தான் அவர் அவ்வாறு செய்ய வேண்டி இருந்திருக்கும். பருமனான அந்த வேட்டியைக் கொண்டு இறந்த சுப்பிரமணிய பிள்ளையை போன்ற தடித்த கழுத்தையுடைய ஒருவர் முதலில் சுருக்கு வளையம் போட்டுக்கொண்டு கழுத்தைச் சுற்றிய பின்னர் சுருக்கிட்டுக் கொண்டு தானே தொங்குவது என்பது மிகவும் கடினமான தாகும் என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்." இராமன் அவர்களின் சாட்சியத்தில் பிற்பகுதி முழுவதையும் மறைத்து விட்டு- முற்பகுதியில் "தொங்க விட அது பயன்படுத்தப் பட்டிருக்க முடியும்" என்ற ஒரே வரிகளை மாத்திரம் எடுத்து கையாண்டு ஒரு அரசாணையின் மூலம் நீதிபதி அவர்கள் தெரிவித்திருக்கின்ற ஒரு நல்ல தீர்ப்பினை மறைக்க முயல்வது தேவைதானா ? பால் 'பிணப் பரிசோதனை நடத்திய டாக்டர் ராமமூர்த்தி பிரச்சினையில் உள்ள வேட்டி, தன்னைத் தூக்கிட்டுக் கொள்ள இறந்து போனவரால் பயன்படுத்தப்பட்டிருக்க முடியும் என்று உறுதியாகக் கூறியுள்ளார்" என்றும் அறிக்கை கூறுகிறது. அரசாங்கம் டாக்டர் ராமமூர்த்தி பிணப் பரிசோ தனை செய்யும் மருத்துவர். வேட்டி பற்றி கருத்துக்கூற அவருக்கு தகுதி இல்லை. வேட்டியைப் பற்றி ராமமூர்த்தி சொன்னதை பெரிதாக -தங்களுக்கு அனுசரணையாக அரசு எடுத்துக் கொண்டு அந்த ஆணையை இங்கே அச்சேற்றிவைத்திருக்கிறார்கள்.