உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நீதி கேட்டு நெடிய பயணம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39 கிறதா? அல்லது நாங்கள், 120 மைல் நடந்து வரு கிறோம்; நாங்கள் கேட்ட வரத்தைத் தாருங்கள், என்று திருச் செந்தூர் முருகனை நாங்கள் பிரார்த்தனை செய்து, அந்தப் பிரார்த்தனையைச் செலுத்த வேண்டுமென்பதற்காக இன் றைக்கு நடந்து கொண்டிருக்கிறோமா? நீதியை நிலைநாட்டிட... இல்லை! ஆனால் தவிர்க்க முடியாத ஒரு கடமையை இந்தத் தமிழ்ச்சமுதாயத்திற்கு-இந்தத் தமிழ் நிலத்திற்கு தேடித் தரவேண்டிய ஒரு நீதியை நிலைநாட்டுவதற்காகத் தான் நானும், நம்முடைய கழகத் தலைமையினுடைய முன் னணியினரும், மாவட்டங்களின் தளகர்த்தர்களும் மகளி ரும், மாணவரும், இளைஞர் அணியினரும், பாட்டாளித் தோழர்களும் இன்று காலையிலிருந்து இலட்சம் பேர் இந்த அணிவகுப்பிலே வந்த காட்சியை நாடு அறிந்திருக்கிறது. ล நாடு அறிந்திருக்கிற காரணத்தினாலேதான் - நாடு மாத் திரமல்ல உலகத்திலே இருக்கிற பல்வேறு தேசங்களும் அறிந்து கொள்ளும் என்ற நம்பிக்கையின் காரணமாகத்தான் சென்னையிலே இருக்கிற வானொலியும்-திருச்சியிலே இருக் கிற வானொலியும் கோவை-நெல்லை போன்ற இடங்களிலே இருக்கிற வானொலியின் கிளைகளும் அல்லது தொலை ஒளிக் காட்சி நிலையமும் நம்முடைய செய்திக்கு அதிக முக்கியத் துவம் தரவில்லையே தவிர வேறு அடிப்படைக்காரணம் இருப்பதாக நான் கருதிடவில்லை. மாயத்தேவர் இங்கே மிகுந்த, ஆவேசத்தோடு குறிப் பிட்டார். சென்னையில் இருக்கிற வானொலி நிலையம் என்ன செய்கிறது? ஏன் எங்களுடைய செய்தியை ஒரு வரியில் சொல்கிறது? டி.வி.எதை எதையோ படம் எடுக்கிறதே! பாரதி விழாவிற்கு ஓடுகிறதே தேவையான ஒன்றுதான். ஆனால் பாரதிக்கு தரப்பட்ட முக்கியத்துவத்தைவிட வேறு யாருக்கோ. தரவேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படு கிறதே! என்ன காரணம் என்று இந்தச் சிந்தனைகளெல் லாம் தமிழ்நாட்டிலே உள்ள மக்களுக்கு வராமல் இல்லை. ஆனால் நான் ஒன்றை மாத்திரம் நம் கழக உடன்பிறப்பு: களுக்கும், இந்த கழகத்தை நீண்ட நெடுங்காலமாக உன்னிப் பாக கவனித்து வருகின்றவர்களுக்கும் எடுத்துக்காட்ட விரும்புகிறேன். பத்திரிகை பலம்-வானொலியின் பிரச்சாரம், டி.வி. போன்று இன்றைக்குக் கிடைத்துள்ள இந்த வாய்ப் புக்கள் - வசதிகள் எதுவும் இல்லாமல் வளர்ந்ததுதான் தி.மு. கழகம்.