உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நீதி கேட்டு நெடிய பயணம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41 பத்திரிகைகள்கூட போட மறுத்துவிட்டார்கள். எக்ஸ்பிரஸ் -தினமணி பத்திரிகைகளிலே விளம்பரமாக வெளி யிட்டார்கள். தினகரன், முரசொலி, எதிரொலி ஆகிய ஏடுகளிலே நம்முடைய விளம்பரங்கள் - செய்திகள் வந்தன. ஆனால் ஒரு சில ஏடுகள் இந்த நெடிய பயணத்தின் விளம் பரத்தைக்கூட வெளியிட மறுத்துவிட்ட நிலைமைதான் இன் றைக்கு நாட்டிலே இருக்கிறது. ஆனால் எனக்கும் உங்க ளுக்கும் உள்ள தொடர்பு. இந்தக் கழகத்திற்கும் உங்க ளுக்கும் இருக்கின்ற தொடர்பு, பத்திரிகை மூலமாக அல்லநம் முடைய உள்ளங்கள் மூலமாக ஏற்பட்டிருக்கின்ற தொடர்பு. அந்தத் தொடர்பை எவராலும் அழித்துவிட முடியாது. இங்கே பேசிய நண்பர்கள் "எதிர்கால முதலமைச்சர் கருணாநிதி" என்று குறிப்பிட்டார்கள். நான் இன்று மாலையிலேகூட நண்பர்கள் ஆற்காடு வீராசாமி, தென்னரசு ஆகியோரிடம் சொல்லிக்கொண் டிருந்தேன். முதலமைச்சராக இருந்து பட்டுக்குடை, பதவிகள் பவி சுகள், போலீசார் அணிவகுப்பு, மாவட்ட ஆட்சித் தலை வர்கள் ஓடிவந்து காரின் கதவைத் திறக்கின்ற காட்சிகள், அதிகாரவர்க்கம் புடை சூழ வருகின்ற ஆடம்பரங்கள் ஆர்ப் பாட்டங்கள் இன்ன பிறவற்றை எண்ணிப் பார்க்கிறேன் ! இன்று காலை மதுரையிலே அண்ணா சிலைக்கு மாலை அணி வித்துவிட்டுப் புறப்பட்ட காட்சியை நினைக்கிறேன்! "வரு கிறேன் அண்ணா! நீ இருந்து என்னை வழி அனுப்பி வைத் திருக்க வேண்டும்! நீ இல்லாவிட்டாலும், நீ என்னோடு இருக்கிறாய்! எங்களோடு இருக்கிறாய்! எங்களது ஊனோடும் உயிரோடும் உயிர்மூச்சோடும் கலந்திருக்கிறாய்! எங்கள் இதயத் துடிப்புகளிலெல்லாம் நிறைந்திருக்கிறாய்! எனவே, அண்ணா! நாம்தான் வழிநடைப் பயணம் செய்கிறோம்! என்று நாம் அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு இன்று மதுரையிலேயிருந்து இங்கே புறப்பட்டு வருகிற நேரத்தில் லட்சத்திற்கு மேற்பட்டோர் அணிவகுத்தீர்களே! அது முதலமைச்சர் என்பதால் 'கிடைத்த செல்வாக்கா? (கைதட்டல்) இதைவிடவா முதலமைச்சர் பதவி பெரிது! கேவலம்! இதைவிட முதலமைச்சர் பதவிபெரிது என்று நம்புபவன் கருணாநிதி என்று நீங்கள் கருதுவீர்களானால், அது தவறு! எனக்கு நீங்கள் தான் வேண்டும்! உங்களுடைய உள்ளங்கள் தான் வேண்டும்! (கைதட்டல்)