உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நீதி கேட்டு நெடிய பயணம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45 எம். ஜி. ஆர். அஞ்சுவாரேயானால் நான் இன்றைக்கு விடுத்திருக்கின்ற அறைகூவலை அடிப்படையாக வைத்தாவது ஒரு வழக்கைத் தொடுத்து வீரப்பன் எப்படி உடந்தை என்று என்னைக் கேட்கட்டும். நான் சொல்லத் தயாராக இருக்கின்றேன். இன்றைக்கு இந்த நாட்டிலே இருக்கின்ற கோவில் உண்டியல்கள் பல இந்த அமைச்சர்களால் பங்கிட்டுக் கொள்ளப்படுகின்றன. காட்டு மரங்கள் எல்லாம் இன்றைக் குக் கூட்டுக் கொள்ளையிலே அமைச்சர்களால் பங்கிட்டுக் கொள்ளப்படுகின்றன. இவைகளுக்கெல்லாம் நியாயம் கிடைக்க வேண்டாமா? நீதி கிடைக்க வேண்டாமா? யாரும் முன்வராத நேரத்தில் சில கட்சிகளெல்லாம் 'தாம்தோம்' என்று குதித்தாலும் கூட, கொதிக்கிற பானையிலே தண்ணீர் தெளித்ததும் எப்படி கொதி அடங்கி விடுகிறதோ அதே போல எவரோ எதையோ தெளித்த காரணத்தால் அவை அடங்கி விட்டன. எதற்கும் அடங்காத, ஆனால் அமைதிக்கு- அண்ணாவின் அறிவுரைக்கு மாத்திரம் அடங்குகிற திராவிட முன்னேற்றக் கழகம், நாட்டிலே அநீதிகள் தலையெடுப்பதை, நீதிக்கு சேதாரம் வருவதை நிச்சயமாக அனுமதிக்காது என்பதற்கு அடையாளமாகத்தான் இந்த நெடிய பயணத்தை நாம் மேற்கொண்டிருக்கிறோம். கொடியவர்கள் நடத்துகின்ற ஆட்சியிலே நடைபெற்று இருக்கின்ற அக்கிரமங்களை மக்களுக்குக் கோடிட்டுக் காட்டு வதற்ககத்தான் இந்த நெடிய பயணத்தை மேற்கொண் டிருக்கிறோம். இந்தப் பயணத்திலே எத்தனை சங்கடங்கள் வந்தாலும், இதை ஏற்றுக்கொண்டு அதே நேரத்தில் அமைதி யாக, அண்ணா கற்பித்த கடமை-கண்ணியம்-கட்டுப்பாடு பட்டுப்போகாமல் இந்தப் பயணத்தை வெற்றிகரமாக நிறைவேற்ற இந்தப்பகுதி மக்களெல்லாம் ஒத்துழைக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு தலைவர் கலைஞர் உரையாற்றினார். -திருமங்கலம் கூட்டத்தில் கலைஞர் உரை 15-2-82 இனமானம் காத்திட இதயத்தில் ஏற்பட்ட ரணங்கள்! நீதிகேட்டு தொடங்கி தொடர்ந்து நடைபெறுகின்ற நெடிய பயணத்தின் விருதுநகர் பாசறையில் பல்லாயிரக்