உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நீதி கேட்டு நெடிய பயணம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 போல் தொண்டர்களுடைய குடும்பத்திலே ஒரு சிறு அல்லல் என்றாலும் அதைத் தன்னுடைய குடும்பத்திலே ஏற்பட்ட அல்லலைப் போலக் கருதுகின்ற தலைவர்களும் உண்டு. எனவே தான் உலகத்திலே எந்த இயக்கமும் பெற்றிராத குடும்பப் பாச உணர்வை திராவிட முன்னேற்றக் கழகம் பெற்றிருக்கிறது. அந்தப் பாச உணர்வைத்தான் இங்கே பேசிய அத்தனை பேருடைய பேச்சிலும் நான் பார்த்தேன். என்னுடைய அருமை நண்பர் அமைப்புச் செயலாளர் தென்னரசு என்னை இங்கே விளிக்கிற நேரத்திலே தணலில் தங்கமாக இங்கே வந்திருக்கின்ற கலைஞர் அவர்களே என்று விளித்தார். கந்தப்பன் அவர்கள், நான் பேசி அதை நீங்கள் கேட்க வேண்டும் என்பதற்காகத் தன்னுடைய பேச்சை நிறுத்திக்கொண்டார். பேசவே இல்லையென்றாலும் கூட நேற்று முதல் அவர் முரசொலி பத்திரிகையிலே தீட்டிக் காட்டப்பட்ட படத்தைப் போல் ஒரு பெரிய பையை தன்னு டைய தோளிலே மாட்டிக்கொண்டு இந்த நெடிய பயணத் திலே அவர் ஈடுபட்டிருக்கின்றார். தென் பாண்டி மண்டலத்திலே இந்தப் பயணம் வெற்றி கரமாக நடைபெற வேண்டுமென்பதற்காக கழகத்தினுடைய அமைப்புச் செயலாளர் என்கின்ற முறையிலே தென்னரசு அவர்களும், நெல்லை, குமரி, மேற்கு ராமநாதபுரம், கிழக்கு ராமநாதபுரம், மதுரை மாவட்டம், மதுரை நகர் ஆகிய நம் முடைய கழக அமைப்புக்களினுடைய செயலாளர்களும் தமிழகத்திலே உள்ள எல்லா மாவட்டக் கழகத்தினுடைய செயலாளர்களும் மகளிர் அணியைச் சேர்ந்த நம்முடைய அருமைச் சகோதரிகளும் தங்களுடைய கால் கடுக்க கடுக்க வியர்வை சொட்டச் சொட்ட இந்தப் பயணத்திலே ஈடு பட்டிருக்கிறார்களென்றால் எதற்காக? நண்பர்களெல்லாம் இங்கே எடுத்துக்காட்டியதைப் போல இந்தப் பயணம் திருச்செந்தூர் வரையிலே சென்று முடிவுற்றால் மறுநாளே இன்று தமிழகத்திலே நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற ஆட்சி கவிழ்ந்துவிடும் அல்லது கவிழ்ந்து விட வேண்டும் என்பதற்காக நாம் திருச்செந்தூர் முருகனி டததிலே லட்சார்ச்சனையா நடத்தப் போகிறோம்! இல்லை. நான் மதுரையிலே என்னை வழியனுப்பி வைத்த விழாவிலே கூடக் குறிப்பிட்டேன். நடைபெறுகின்ற ஆட்சி அக்கிரம மான ஆட்சியாக இருந்தாலும் இந்தப் பயணத்தினுடைய நோக்கம்-திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய நோக்