உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நீதி கேட்டு நெடிய பயணம்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 இரு வண்ணக் கொடிகளிடையே இஸ்லாம் மக்களின் இளம்பிறைக் கொடிகளும் சங்கம மாயின! வாழ்த்து முழக்கங்கள் புதிய வலுவினை வழங்கின! வழி நெடுகிலும் வரவேற்ற காட்சிகளோ வற்றாத உற்சாகத்தை- வாடாத நினைவுகளை- நெஞ்சில் நட்டன! வீதியின் இருபக்கமும் நின்றோர். ஆடவர் பெண்டிர்-நீதியின் பக்கமே எங்கள் நீள்கரம் அசையும் என்றனர். அன்பால் வென்றனர். பண்பாய் போற்றினர். இப்படை தோற்கின் எப்படை வெல்லும்? என்று அடிக்கடி கேட்பாரே அண்ணன்; அப்படையின் எழுச்சி யன்றோ! என் இதயமெலாம் மலையருவி போல் மகிழ்ச்சி யன்றோ! பாதையிலே உணவு- பந்தலிலே சாப்பாடு-பல லட்சம் பேருக்குப் போதுமா இந்த ஏற்பாடு? ஆயினும் என்ன? அயர்வு சிறிது மின்றி அடலேறு நடை போட்டாய்! இடையிடையே கூத்தும் இசையும் கொட்டும் மேளமும் களைப்பினை யாற்றும் மாமருந்து களாயின! வளம் மலிந்த பகுதியில்