உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நீதி கேட்டு நெடிய பயணம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 எதிர்த்து வெற்றிக் கொடி நாட்டியவர்கள் நாம். வடக்கே யிருந்து யார் வந்தாலும் தமிழ்நாட்டு எல்லையிலே கால் வைத்துவிட்டால் அவர்கள் தமிழ் நாட்டுக்குள்ளே நுழைந்து விட்டால் நாங்கள் இந்தியை உங்கள் மீது திணிக்க மாட் டோம் என்று கணபதி காப்பு பாடிவிட்டுத்தான் கச்சேரியே ஆரம்பிக்க வேண்டும். அப்படிப்பட்ட நிலை. தமிழ்நாட்டிற் குள்ளே வந்து எந்த அரசியல்வாதியானாலும் சரி இந்த மாநிலத்தவர் அல்லாத அரசியல்வாதிகள் குறிப்பாக வடக் குப் பகுதியைச் சேர்ந்தவர்கள் அவர்கள் இமயத்திலிருந்தே வந்தாலும் சரி தமிழ்நாட்டிற்குள்ளே வந்து அடி எடுத்து வைத்தால் அவர்கள் பேசுகின்ற அரசியல் மேடைகளிலே இந்தியைத் திணிப்பது எங்களுடைய நோக்கமல்ல என்று சொல்ல வேண்டுமென்றால், அதற்கு என்ன காரணம்? 1938-ஆம் ஆண்டிலேயிருந்து 65, ஆம் ஆண்டு வரையிலே நடைபெற்ற மொழிப் போராட்டத்திலே பல்லாயிரக் கணக்கானோர் சிறை புகுந்தார்கள். பல பேர் செத்து மடிந் தார்கள். பல பேருடைய நெஞ்சங்களை தூப்பாக்கி ரவைகள் துளை பார்த்திருக்கின்றன. துப்பாக்கிக் குண்டுகள் தங்களு மலர்ச்செண்டுகளாக ஏந்தி மாணவ மணிகள் பலர் மடிந்து போயிருக்கின்றார்கள். டைய மார்பகங்களை தம்பி கோபால்சாமி சொன்னதைப்போல் நான் சிறைப் பட்ட காரணத்தால் ஏழு பேர் தீக்குளித்துச் செத்தார்கள் என்று சொன்னாரே அதைப்போல மொழியைக் காப்பாற்ற தமிழ் மொழியைக் காப்பாற்ற-இந்தி ஆதிக்கத்தை அகற்ற இந்தி ஒழிக, தமிழ் வாழ்க என்று சொல்லிக் கொண்டே எட்டு தமிழ் நாட்டுச் சிங்கங்கள் தீக்குளித்துச் செத்த வரலாறு திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய வரலாறு ஆகும். உங்களால் முடிந்ததா! அந்தக் கழகத்தைப்பார்த்து அந்தக் கழகத்தைச் சேர்ந்தவர் எத்தனை பேர் அண்ணா தி. மு. க. விலே இன்றைக்குமிருக்கிறார்கள். அவர்களையும் சேர்த்து உங்க ளால் இந்தித் திணிப்பை எதிர்க்க முடியுமா? என்று கேட்கின்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களுக்கு நான் சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன். நான் கேட்ட கேள்விக்கு இதுவரையிலே பதிலளிக்கவில்லை. உங்களுடைய ஆட்சிக் கேரளத்திலே இருந்ததே; உங்களுடைய ஆட்சி திரிபுராவிலே இருக்கிறதே; உங்களுடைய ஆட்சி மேற்கு வங்கத்திலே இருக்கிறதே; அங்கெல்லாம் தமிழ், ஆங்கிலம்