உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நீதி கேட்டு நெடிய பயணம்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 ஸ்டேசனில் பட்டவருடைய பெயரையும் சொல்லாமல் ஒரு மாதம் வரையில் லாக்கப்பிலோ அல்லது போலீசாருடைய பொறுப் பிலோ வைத்திருந்து இப்படி எழுதிக் கொடுக்கவேண்டும் என்று வற்புறுத்தி போலீஸ் வைத்திருந்தால் சில போலீஸ் ஸ்டேசனில் வழக்கமாக என்ன செய்வார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். எப்படியாவது ஒருவரை அப்ரூவராக ஆக்க அவர்கள் அவரை என்னென்ன சித்திர வதைகள் செய்து தாங்கள் சொல்கிறபடி எழுதிக் கொடுக்கச் சொல்வார்கள் என்பதும், அப்படி எழுதிக் கொடுக்கா. தவர்கள் சித்திரவதைக்கு ஆளாகி லாக்கப்பிலே மரண மடைந்து அது மாரடைப்பால் மரணம் என்று சொல்லிப் படுவதும் நீங்கள் அறிவீர்கள். போலீஸ் இலாகாவிலை எல்லோரும் அல்ல-சில பேர். இப்படிப்பட்ட அக்கிரமச் செயல்களில் இந்த ஒரு மாத காலத்திற்குள் அப்படிப்பட்ட செயல்களில் ஈடுபட்டிருக்க மாட்டார்கள் என்று கருதுகிறீர்களா? முதலமைச்சர் எம். ஜி.ராமச்சந்திரனை கொல்ல முயன்றவர் என்று இப்போது ஒருவரைக் கைது செய்திருக்கிறார்கள் என்றால் இடையில் இந்த ஒரு மாத காலத்தில் நடந்த சம்பவங்கள் என்ன என்பதை அறிய நாடு துடியாத் துடித்துக் கொண்டிருக் கிறது. கைது செய்யப்பட்டவர் இப்படி ஒரு வன்முறைச் சம்ப வத்திலே ஈடுபடுத்தப்பட்டிருப்பாரானால் அவருடைய செயலை அனுமதிக்க திராவிட முன்னேற்றக் கழகம் தயாராக இல்லை. எம். ஜி. ஆரைப் பொறுத்த வரையில் கட ந்த ஆண்டிலோ அல்லது கடந்த ஆண்டுக்கு முந்திய ஆண்டிலோ நெல்லை மாவட்டத்திலே கற்றுப்பயணம் செய்ய புகைவண்டி யிலே வந்தபோது, மணியாச்சி ரயில் நிலையத்தில் ஒருவன் கத்தியை வீச, அது ரயில் பெட்டியிலே பட்டு எம். ஜி. ஆர். தப்பித்துக் கொண்டார் என்ற செய்தி பத்திரிகைகளில் வர நான் அந்தச் சம்பவத்தை கண்டித்து எம். ஜி. ஆர். தப்பித்துக் கொண்டதற்கு மகிழ்ச்சி தெரிவித்து சென்னை யிலேயிருந்து ஒரு அறிக்கை தந்தேன். நிருபர்கள் மாலையிலே அவரைப் பார்த்து எதிர்க்கட்சித் தலைவர் கருணாநிதி வன் முறைச் சம்பவத்தைக் கண்டித்து அறிக்கை விட்டிருக்கிறாரே பார்த்தீர்களா? என்று கேட்டிருக்கிறார்கள். அதற்கு எம். ஜி.ஆர். கருணா நிதிக்கு நான் இன்னும் சாகவில்லையே என்கின்ற கவலை என்று பதிலளித்தார். அப்படிப்பட்ட நாகரீகம் படைத்த அற்புதமான அறிஞர் தமிழகத்து