உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நீதி கேட்டு நெடிய பயணம்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 உணர்ச்சியே நீதிபதி எழுதுகிறார் "மனிதாபிமான இல்லாமல் நடந்துகொண் டிருக்கிறார்கள். இவர்களது செயலைப் பார்க்கும்பொழுது என்ன தோன்றுகிறது. என்றால், 'ஒருவேளை சுப்பிரமணிய பிள்ளைக்கு முதலுதவி செய்து அவரை உயிர் பிழைக்க வைத்துவிட்டால் அவர் கண் விழித்ததும், வாய் பேசத் தொடங்கியதும் மரண வாக்குமூலம் கொடுத்து, இவர்களையெல்லாம் காட்டிக் கொடுத்துவிடுவார் என்ற பயத்தின் காரணமாகத்தான் அவருக்கு முதலுதவி செய்யவில்லை' என்று அறங்காவலர் குழுத் தலைவர் பாலகிருஷ்ணனை, குழு உறுப்பினர் சீனிவாச பாண்டியனை, கேசவ 'ஆதித்தன, ராஜாராம், மகாதேவன் என்ற அதிகாரிகளை பெயர் குறிப்பிட்டு இந்த புத்தகத்திலே சொல்லி இருக்கிறாரே, இல்லையென்றால் நாளை மறுநாள் நடைபெறுகிற கூட்டத்திலே அறநிலையத்துறை அமைச்சர் நீதிபதி பால் கமிஷன் அறிக்கையை வைத்துக் கொளுத் தட்டும். ஏன் இப்படிப்பட்ட அபாண்டங்கள்? கொலைகாரர்கள் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றார்கள்! அவர்கள் கைது செய்யப்படவில்லை! நடைபெற்றிருக்கிற ரூபாய்களுக்காக இல்லை! கொலை ஓராயிரம் ஈராயிரம் கொலை நடக்கவில்லையாம்; குற்றவாளிகள் இவர்கள் இல்லையாம்! தங்க நகைகள், வைர வைடூரியங்கள், வைர வேல் ஆகிய இத்தனையும் அந்த உண்டியலிலிருந்து கொள்ளையிடப்பட்டு —அத்தனையும் சென்னைக்குக் கொண்டுபோகப்பட்டு, ஓர் அமைச்சருடைய வீட்டிலே வைத்துப் பங்கு போடப்பட்டு, அதற்கு உடந்தையாக இருக்க வேண்டுமென்று சுப்பிரமணிய பிள்ளையை கேட்கப்பட்டு, அதை சுப்பிரமணியபிள்ளை மறுத்த ஒரே காரணத்திற்காக அவர் கொலை பட்டிருக்கிறார். செய்யப் செய்தவர்கள் கொலை செய்யப்பட்டது தவறு. கொலை தண்டிக்கப்பட வேண்டும். இது எங்களுடைய வாதம் இதற்காகத்தான் இந்த நெடிய பயணம்! ஆனால், அவர்களும் கூட்டம் போடுகிறார்கள்! எதற்காகத் தெரியுமா?