உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நீதி கேட்டு நெடிய பயணம்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 "உங்களுடைய உடம்பு என்றுதான் அவர் கேட்டார். ஒத்துக்கொள்ளுமா?" என்னை முன்னிலைப்படுத்தி - என்னை மையப்படுத்திக் கேட்ட காரணத்தால், நான் நீதியை நிலைநாட்ட - நாட்டு மக்கள் விழிப்படைய தமிழ்ச் சமுதாயம் முன்னேற- இருண்டு கிடக்கின்ற தமிழ்ச் சமுதாயம் ஒளிமயமான இடத் திற்கு வந்திட என்னுடைய உடம்பைப் பற்றிக் கவலைப்பட வில்லை. அதைப் பற்றிக் கவலைப்படாதவன் என்ற காரணத் தால் நீங்கள் அதைப் பற்றிச் சிந்திக்கிறீர்கள்! போரசிரியர் அவர்களே! இதற்கு ஒப்புதல் தாருங்கள்! என்றுதான் நான் அவரிடத்திலே கேட்டேன். அவரும் சரி என்றார். ஒரு - நடைபெறுகிற அக்கிரமம் நேரத்தில் ஒரு கொடுமை நடைபெறுகிற நேரத்தில் அதைத் தடுக்க வேண்டு மென்று எண்ணும் பொழுது அதை எப்படித் தடுக்கலாம்; எந்த வகையிலே தடுக்கலாம் என்று சில நேரங்களில் - சில சம்பவங்களில் யோசித்துக் கொண்டிருக்க முடியாது! என்னுடைய உடல்நிலை, என்னுடைய வாழ்க்கைமுறை, நான் பிறந்தது முதல் ஒரு மைல் அல்லது இரண்டு மைல் தூரத்திற்கு மேல் நடந்ததே கிடையாது. என்னுடைய பள்ளிப் பருவத்திலேகூட என்னைப் பக்கத்திலே உள்ள ரயிலடிக்கு ஒருமுறை என்னுடைய குடும்பத்தார் அழைத்துச் சென்றிருக்கிறார்கள். வண்டி பழுதாகிவிட்ட காரணத்தினால் நடந்தே சென்றிருக்கிறேன். சிறு வயதிலே அவ்வளவு தான். அதற்குப் பிறகு பொதுவாழ்விற்கு வந்ததற்கு பிறகு நான் நடந்தேன் என்றால் 1969-ம்ஆண்டிற்குப் பிறகு பேரறிஞர் அண்ணா அவர்களுடைய நினைவிடத்திற்கு அண்ணா சாலையிலே இருந்து கிட்டத்தட்ட இரண்டு கிலோ மீட்டர் தூரம் சென்று மலர் வளையம் வைக்க விடியற்காலை 6அல்லது 7 மணிக்கு நாங் கள் நடந்திருக்கிறோம். அதைத் தவிர நான் நடந்து அறியாத வன் நான் நடந்து அறியாதவன் என்றால் என்னுடைய அருமை நண்பர் பி.டி.ஆர். பழனிவேல்ராசன் அவர்களைப் போல பெரியதோர் குடும்பத்திலே பிறந்தவன் என்ற காரணத் தினால் நடந்து அறியாதவன் என்று யாரும் கருதிக் கொள்ளா தீர்கள். மிகமிகச் சாதாரணமான- மிகமிகச் சாமான்யமான ஒரு குக்கிராமத்தில், மிகச் சாதாரணமான ஒரு குடும்பத்தில் மிக மிக பின் தங்கிய சமுதாயத்தில், இவனும் இப்படி வருவானா?