பக்கம்:நீதி போதனைப் பாட புத்தகம்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

'முகவுரை'

         மக்களுக்கு நற்பண்புகள் மிக மிக இன்றியமையாதவை. இப் பண்புகளை இளமையிலேயே மேற் கொண்டிருந்தால் தான் வாழ்க்கையில் பேரும் புகழும் பெற இயலும். இந்தச் சீரிய கோக்கங் கொண்டே இந் நூல் மாணவர்களுக்கென வெளி வருவதாயிற்று. இந் நூலில் மக்கள்பால் அமையவேண்டிய பண்புகளுள் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து, அப் பண்புகளை நன்கு விளக்கி, அப் பண்புக்குரியவராக விளங்கியவர்களின் வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கங்களையும் எழுதியிருப்பதை அறிஞர்கள் அறிந்து, இதனை மாணவ உலகத்திற்குப் பயன்படுமாறு செய்ய வேண்டுகிறேன்.
       கால அட்டவணையில் வாரத்தில் நீதி போதனையை நடத்த ஒரு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அந் நேரத்தில் இத்தகைய நீதிகளும் வரலாறுகளும் உதவக்கூடும் என்ற எண்ணத்துடன் இந்நூல் வெளி வருதலின், பள்ளிக்கூட அதிகாரிகளும், ஆசிரியர்களும் இதனைப் பெரிதும் ஆதரிப்பார்கள் என்று நம்புகிறேன்.
   
                                                       ஆசிாியா்